Aran Sei

‘மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை’ – தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வயது வரம்பை நிர்ணையிக்க வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக் காலத்தில் தேர்வு – மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு

கொரோனா தடுப்பூசி முகாம்களில் மாற்று திறனாளிகளுக்குச் சிறப்பு மையங்கள் அமைக்கவும், சாய்வுத்தளங்கள் அமைக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பதிலளித்துள்ள தமிழக அரசு , மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், கொரோனா தடுப்பூசி முகாம்களில் சிறப்புமையங்கள் அமைக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

60% பாடங்கள் பார்வை திறனற்றவர்களால் படிக்க இயலவில்லை – என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தை ஆய்வு செய்த விதி அமைப்பு தகவல்

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்படுவது குறித்து மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு மத்திய அரசு இன்னும் பதில் அளிக்கவில்லை என்றும் தமிழக அரசு ,சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்