Aran Sei

பாலியல் புகாரில் சிக்கிய துறைத்தலைவர்: போராடிய மாணவர் ஒருவர் தற்கொலை முயற்சி

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறை மாணவர்களின் தேர்வு மதிப்பெண்ணில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதனைக் கேட்கச்சென்ற மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் அத்துறைத் தலைவர் சொளந்தர்ராஜன் மீது குற்றம்சாட்டி நான்கு நாட்களாக தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்த மாணவர்களில் ஒருவர் கை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இப்போராட்டம் குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின்  தொல்லியல் துறை மாணவரிடம் அரண்செய் பேசியபோது, “விடுதி உணவுக் கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடினோம். அதற்காக எங்களைத் தொல்லியல் துறைத் தலைவரும், பேராசிரியருமான சொந்தரராஜன் திட்டமிட்டு 8 மாணவர்களைத் தேர்ச்சியடையவிடாமல் செய்துவிட்டார். உடனே, நாங்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்டோம். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை.” என்று முந்தைய புகாரை நினைவுக்கூர்ந்தார்.

பாலியல் புகாரில் சிக்கிய துறைத்தலைவர்: கண்டுகொள்ளாத பல்கலைக்கழகம் -மாணவர்கள் போராட்டம்

“தொடர்ந்து போராட்டம் நடத்தினோம். எங்களது தேர்வுத்தாள்களை மீண்டும் மறுபரிசீலனை செய்வோம் என நிர்வாகம் கூறியதால் போராட்டத்தை முடித்துக்கொண்டோம். பிறகு, எங்கள் மதிப்பெண்களை விசாரித்தோம். இரண்டு நாட்களாக எங்களை அலையவிட்டார்கள். இறுதியாக எங்களது மதிப்பெண்களை வாய்வழியாகக் கூறினார்கள். அதில், அனைவருமே தேர்ச்சி அடைந்திருந்தோம். மதிப்பெண்களை வழக்கமாக பல்கலைக்கழகத்தின் விதிப்படி, நோட்டிஸ் போர்டில் போடுங்கள் என்று கூறியதற்கு, துறைத் தலைவர் சௌந்தரராஜன், எங்களை நோக்கி தகாத வார்த்தைகளால் திட்டியும் எங்களை தாக்கியும் வெளியே அனுப்பினார். உடனிருந்த சக மாணவி ஒருவரிடம் அத்துமீறலிலும் ஈடுபட்டார்.” என்று அவர் தெரிவித்தார்.

“நாங்கள் எதிர்த்துக் கேட்டபோது, அவர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியே சென்றுவிட்டார். இந்த விவகாரத்தை நாங்கள் பல்கலைக்கழக நிர்வாகியிடம் எடுத்துக்கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. நேற்று (மார்ச் 20) இரவு எங்கள் ஐந்து பேரையும் சஸ்பெண்ட் செய்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து கடிதம் வந்துள்ளது.” என்று அவர் குறிப்பிட்டார்.

தங்காத விடுதிக்கு கட்டணமா? – சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

இன்று (மார்ச் 20) காலைப் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண் தன் கையை அறுத்துக்கொண்டதாக கூறிய மாணவர், “காலையில் அறுக்கப்பட்ட கையுடன் அவரைப் பார்த்தவுடன், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். சிகிச்சைக்கு பின் இப்போது பல்கலைக்கழகம் திரும்பிக்கொண்டிருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.

.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்