Aran Sei

செக் மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்ட சரத்குமார், ராதிகா சரத்குமார் – ஒராண்டு சிறை தண்டனை விதித்த சிறப்பு நீதிமன்றம்

காசோலை மோசடி வழக்கு நடிகர் சரத்குமார், ராதிகா சரத்குமார், மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர் லிஸ்டன் ஸ்டீபன் ஆகியோருக்கு சிறை தண்டனை வழங்கிச் சென்னை எம்.பி, எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டன் ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ’இது என்ன மாயம்’ திரைப்படத்திற்காக ரேடியன் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 1.5 கோடி ரூபாய் கடனாகப் பெறப்பட்டுள்ளது. மேலும், சரத்குமார் தனிப்பட்ட முறையில் அந்த நிறுவனத்திடம் 50 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருக்கிறார்.

ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் – ஊதியம் அளிக்காமல் கொத்தடிமைகளாக நடத்தப்படும் தூய்மைப்பணியாளர்கள்

கடனைத் திரும்பிச் செலுத்துவதற்காக மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் இரண்டு காசோலைகளும், சரத்குமார் தரப்பில் 5 காசோலைகளும் வழங்கப்பட்டுள்ளது. வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்ததை அடுத்து ரேடியன் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்து வந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் சரத்குமாருக்கு 7 வழக்குகளில் தலா ஒராண்டு சிறை தண்டையும், ராதிகா சரத்குமார் மற்றும் லிஸ்டன் ஸ்டீபன் ஆகியோருக்கு இரண்டு வழக்குகளில் தலா ஒராண்டு சிறையும் வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

Source : PuthiyaThalaimurai

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்