Aran Sei

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷத்தை கக்கக் கூடாது: ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

credits : the hindu

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ”அறிவுப்பூர்வமான விவாதங்களை நடத்தாமல், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்கள், எதிர்தரப்பினர் மீது விஷம் கக்குவது வழக்கமாகி விட்டது” எனக் கூறி, ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

சென்னை அன்பகத்தில், கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக, ஆதி தமிழர் மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம், ஆர்.எஸ்.பாரதி, காவல்துறையால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

தொழிற்சங்க செயல்பாட்டாளர் நோதீப் கவுருக்கு ஜாமீன் – பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் உத்தரவு.

இந்த வழக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தன்னுடைய பேச்சிலிருந்து குறிப்பிட்ட சில பகுதியை மட்டும் எடுத்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பீமா கோரேகான் வழக்கு – கவிஞர் வரவர ராவுக்கு ஆறு மாதம் பிணை வழங்கி மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மேலும், அரசியல் காரணங்களுக்காக உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும், நீதிபதிகளை அவமதிக்கும் வகையிலோ, பட்டியலின மக்களை புண்படுத்தும் வகையிலோ பேசவில்லை எனவும் வாதிடப்பட்டது.

இட ஒதுக்கீடு மறுப்பு: ’அண்ணா பல்கலைக்கழக எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ரத்து செய்தது ஏன்?’ – உயர் நீதிமன்றம் கேள்வி

ஆனால், ஆர்.எஸ்.பாரதியின் மொத்த பேச்சும் பட்டியலின மக்களுக்கு எதிராகவும், நீதிபதிகளுக்கு எதிராகவும் உள்ளதாகவும், உயர் பதவிகளை வகிக்க பட்டியலின மக்களுக்கு தகுதியில்லை என்ற பொருள்படும்படி பேசியுள்ளதாகவும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க 30 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டிஆர்பி முறைகேடு : அர்னாப் கோஸ்வாமியின் பாதுகாப்பை நீட்டித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு மக்களை பிளவுபடுத்தும் வகையிலும், நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பாரதியின் பேச்சை எடுத்துக் கொண்டால், அது மக்கள் மனதில் வெறுப்புணர்வை உருவாக்குவதாக அமைந்து விடும் எனவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

எத்தனை முறை சொல்வது – “திருமணத்தில் தலையிடும் உரிமை யாருக்கும் இல்லை” – அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், ”ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபணமாகிறதா, இல்லையா என்பதை, காவல்துறை சேகரித்த ஆதாரங்களை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டியது விசாரணை நீதிமன்றம் தான்” எனக் கூறி, வழக்கை ரத்து செய்ய மறுத்து ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கங்காசாகர் மேளா – ‘மத நம்பிக்கைகளை விட உயிர் தான் முக்கியம்’ : கொல்கத்தா உயர் நீதிமன்றம்

மேலும், ”அறிவுப்பூர்வமான விவாதங்களை நடத்தாமல், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்கள், எதிர்தரப்பினர் மீது விஷம் கக்குவது வழக்கமாகி விட்டது” என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ”இது இளைய தலைமுறையினருக்கு நல்லதல்ல” எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்