Aran Sei

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரிய மனு – தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த இல. கணபதி என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி அடங்கிய அமர்வு இதனை தெரிவித்துள்ளது.

”விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்கும், ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. அரசின் இந்த உத்தரவை ரத்து செய்து, சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட்டு, அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதியளிக்க வேண்டும்” என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

மேலும், சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்க குறைந்த பட்சம் 5 பேருக்காவது அனுமதி அளிக்க வேண்டும் என மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார்.

மனுதாரரின் வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், “வழிபாடு உரிமையைவிட வாழும் உரிமையே முக்கியமானது. கொரோனா காலத்தில் பொது நலன் கருதியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அரசின் முடிவில் தலையிட முடியாது” எனக் கூறி  வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்