Aran Sei

7.5 சதவீத இட ஒதுக்கீடு : தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

Image Credits: India Herald

ருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் சமீபத்தில் கொண்டு வரப்பட்டதை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் சட்டத்துக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாதென மறுத்துள்ளது.

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கித் தமிழக அரசுச் சட்டம் கொண்டு வந்தது. இதன் முலம் இந்த ஆண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் 405 அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

7.5 இட ஒதுக்கீடு : எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது- உயர்நீதி மன்றம்

இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு தனியார் பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு முடித்த பூஜா என்ற மாணவி இந்தாண்டு 3 ஆவது முறையாக  நீட் தேர்வு எழுதி 565 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

நீட் தேர்வில் 565 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததையடுத்து 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்துப் பூஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5% ஒதுக்கீடு வழங்க வேண்டும் – கல்வியாளர் பிரபா கல்விமணி கோரிக்கை

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் எம்.எஸ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, “அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தமிழக அரசு கொண்டு வந்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாகவே அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் தனக்கு மருத்துவ இடம் கிடைக்காமல் போனதாக” மனுதாரர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நீட் தேர்வில் 200 மதிப்பெண்கள் கூடத் தாண்டாத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது நியாமற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு : தடை கேட்கும் பாஜக ?

தமிழக அரசு கொண்டு வந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்திற்கு  இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு முடியும் வரை  7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களை இறுதி செய்யக் கூடாது எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், தற்போது அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதால் தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். அரசு பள்ளிகளின் தரம் குறைவாக இருப்பதால்தான் மாணவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகத் தெரிவித்த நீதிபதிகள், அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு சாத்தியமா? – சீ.நவநீத கண்ணன்

அரசுப் பள்ளி மாணவர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளாகப் பார்க்க வேண்டுமே தவிர எதிரியாகப் பார்க்கக் கூடாது எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்க்கை கிடைப்பதை உறுதி செய்யவே இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு தொடர்பாகத் தமிழக அரசைப் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த வழக்குகளோடு சேர்த்து இந்த வழக்கையும் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்து விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்