Aran Sei

மருத்துவர் சுப்பையாவின் இடைநீக்கத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம் – நிவாரணம், வேலை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு

ருத்துவர் சுப்பையாவை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தஞ்சாவூர் பள்ளி மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் (ஏபிவிபி) மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டினர். அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்த அவர்களை ஏபிவிபி முன்னாள் தேசிய தலைவரும் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறையின் தலைவராக இருந்த மருத்துவர் சுப்பையா நேரில் சென்று சந்தித்தார்.

மருத்துவர் சுப்பையாவின் செயல் அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மீறும் வகையில் இருப்பதாகவும், அரசியல் இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டி, மருத்துவர் சுப்பையாவை பணியிடை நீக்கம் செய்து மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் சுகாதார துறை செயலாளர் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர். இதை எதிர்த்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

பெண்ணின் வீட்டின் முன் சிறுநீர் கழித்து துன்புறுத்திய வழக்கு: மருத்துவர் சுப்பையா சண்முகம் கைது

இந்நிலையில், நேற்று (மார்ச் 31), இவ்வழக்கின் விசாரணை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பாக நடந்துள்ளது. இருதரப்புவாதங்களையும் கேட்டுள்ள நீதிபதி,மருத்துவர் சுப்பையாவின் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து உத்தரவி்ட்டுள்ளார்.

மேலும், “மருத்துவர் சுப்பையாவுக்கு பண பலன்களுடன் மீண்டும் பணி வழங்க வேண்டும். அவருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்த விசாரணையை அதிகாரிகள் 12 வாரத்துக்குள் முடிக்க வேண்டும். இந்த விசாரணைக்கு மனுதாரர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று நீதிபதி டி.கிருஷ்ணகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வயதான பெண் ஒருவரின் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்து துன்புறுத்திய வழக்கில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் முன்னாள் தேசிய தலைவர் மருத்துவர் சுப்பையா சண்முகம் காவல்துறையால் மார்ச் 19ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்