Aran Sei

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு வழக்கு: இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

Image Credits: The Hindu

ன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது, இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கி முந்தைய ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இச்சட்டத்தை எதிர்த்து 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. அரசியல் லாபத்துக்காக சட்டம் இயற்றப்பட்டதாக அந்த மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசு, 1983-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக கூறியது.

இம்மனுக்கள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோது, வன்னியர்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் நியமனங்கள் நடைபெற்று வருவதால் அதை தடுக்கும் வகையில் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழ்நாடு அரசுத் தரப்பில் அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை என்பதால் தடைவிதிக்க அவசியம் இல்லை என்றும் வாதிடப்பட்டது. இடைக்கால கோரிக்கை மீதான வாதங்களை இரு தரப்பும் முன்வைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இறுதி விசாரணைக்கான தேதியை ஆகஸ்ட் 25 ஆம் தேதி முடிவு செய்வதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 25), அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது, இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டின் கீழ் நியமனங்கள் மேற்கொள்ள தடைவிதிக்காமல் வழக்கு செப்டம்பர் 14-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய பதிவுகள்:

இரண்டரை கோடி வன்னியர்களை அடகு வைத்தது பாமக : காடுவெட்டி குரு மகன் கனலரசன்

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: ‘இடஒதுக்கீட்டில் நம்பிக்கை இல்லாத பாஜக என்ன சொல்லும்’ – ப.சிதம்பரம் கேள்வி

‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்?’ – திருமாவளவன் கேள்வி

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்