Aran Sei

கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் – கொலைகுற்றமும் சுமத்தலாம் என்று நீதிமன்றம் கருத்து

ந்த கொரோனா பரவல் சூழலில், அரசியல் கட்சிகள் சமூக இடைவெளியின்றி தங்கள் விருப்பம் போல பரப்புரை செய்ததை தடுக்கத் தவறிய தேர்தல் ஆணையம் மீது, கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அண்மையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கரூரில் வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா விதிகளை பின்பற்றும் வகையில், முறையான ஏற்பாடுகள் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று (ஏப்ரல் 26), இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமாமூர்த்தி அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பாக வழக்கறிஞர் நிரஞ்சன் கோபாலன் ஆஜரானார்.

கும்பமேளா 2021: மக்கள் வாழ்க்கை மீது தலைவர்கள் காட்டிய அலட்சியம்

அப்போது,  “கொரோனா இராண்டாம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம். சமூக இடைவெளியின்றி அரசியல் கட்சிகள் தங்கள் விருப்பம் போல் தேர்தல் பரப்புரை செய்ததை தடுக்காமல் இருந்தீர்கள். உங்கள் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை.” என்று நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கூறியுள்ளார்.

மேலும், “இன்றைக்கு உள்ள மோசமான தொற்று பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நீதிமன்றம் எவ்வளவோ அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் அதை பொருட்படுத்தவில்லை. வாக்கு எண்ணிக்கையின் போது, செய்யப்படவிருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பதை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். இல்லையென்றால், வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்கப்படும்.” என்று நீதிபதி எச்சரித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, வழக்கை ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதற்குள்ள, வாக்கு எண்ணிக்கையின் போது செய்யப்பட உள்ள தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: Thewire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்