Aran Sei

‘குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏக்கள் பதில் அளிக்க வேண்டும்’ – உயர்நீதிமன்றம் உத்தரவு

மிழக சட்டபேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 சட்டபேரவை உறுப்பினர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் வெளிப்படையாகச் சந்தையில் விற்பனைக்குக் கிடைப்பதை அரசின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டுசெல்லும் நோக்கில், 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள்  குட்காவை திமுக உறுப்பினர்கள்  கொண்டு சென்றனர்.

இது சட்டப்பேரவையின் உரிமையை மீறிய செயல் என்பதால், இது தொடர்பாகப் பேரவை உரிமை குழுவிற்கு பேரவை தலைவர் பரிந்துரை ஒன்றை அளித்தார். அந்தப் பரிந்துரையில், விசாரணை நடத்துவதற்காகத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான பேரவை உரிமைக் குழுவால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்  உள்ளிட்ட 23 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

குட்கா விவகாரத்தில் திமுக மீதான நோட்டீஸ் ரத்து: குட்கா அரசின் ஆட்டம் முடியப் போவதாக  ஸ்டாலின் திட்டவட்டம்

இந்த நோட்டீஸை எதிர்த்து அனைவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீஸில் அடிப்படை தவறுகள் இருப்பதாகக் கூறி அதன் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இருந்தாலும், தவறுகளைக் களைத்துவிட்டு புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என்று தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, பேரவை உரிமைக்குழு கூடி  இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை  எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வமும் புதிதாக வழக்குகளைத் தொடர்ந்தனர்.

அந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் உரிமை மீறல் தொடர்பாக அனுப்பப்பட்ட இரண்டாவது நோட்டீஸ் ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது.

பொதுமக்கள் மீதான ஊரடங்கு கால வழக்குகள் : ’கேள்விக்குறியான இளைஞர்களின் எதிர்காலம்’ – ஸ்டாலின் கண்டனம்

அதைத்தொடர்ந்து, இந்த நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்துச் சட்டமன்ற செயலாளர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 19), இம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, இதுதொடர்வாக, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 சட்டபேரவை உறுப்பினர்களும் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்