Aran Sei

‘அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவி செல்லும்’ – சென்னை உயர்நீதிமன்றம்

திமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களின் நியமத்தை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் எந்தவித தவறுமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு இந்திய கட்சிகளுக்கும் பிரதியேக விதிகள் உள்ளன. அதன்படி, அதிமுகவில் புதிய பதவிகளை உருவாக்கக் கட்சிக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது, கட்சியின் பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. ஆனால் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார்.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக சசிகலா நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர்.

தர்மயுத்தம் 2.0 – களை கட்டும் அதிமுக

இந்நிலையில், “இந்நியமனங்கள் அதிமுக விதிகளுக்கு முரணானது. ஜெயலலிதா இருந்தபோதுள்ள விதிகளைப் பின்பற்ற வேண்டும். பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்துவிட்டு, ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை ஏற்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.” என்று அதிமுக உறுப்பினரும், வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு, இன்று (செப்டம்பர் 20), சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, “ஒரு உள்கட்சி விவகாரத்தில் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை தேர்தல் ஆணையம் ஆராய முடியாது. கட்சியின் பிரதிநிதிகள் அளிக்கும் பிரமாணப் பத்திரத்தை ஏற்றுக்கொண்டு நிர்வாகிகளை ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் தேர்தல் ஆணையத்தின் முடிவு.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நாற்காலி யாருக்கு? – வலுக்கும் ஈபிஎஸ் – ஓபிஎஸ் மோதல்  

மேலும், “அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் எந்தவித தவறுமில்லை.” என்றுக்கூறி வழக்கை முடித்துவைத்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்