Aran Sei

தூய்மை பணியாளர்களைப் பணியிலிருந்து நீக்கிய சென்னை மாநகராட்சி – எஸ்.டி.பி.ஐ தலைவர் கண்டனம்

கொரோனா காலத்தில பணிசெய்த முன்களப் பணியாளர்களை எவ்வித முன்னறிவிப்பின்றி வேலையில் இருந்து நீக்கியதை எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் அனைவரும் அச்சத்துடன் இருந்த வேளையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் முன்களப் பணியாளர்களாக செயல்பட்டவர்களில் முக்கியமானவர்கள் தூய்மைப் பணியாளர்கள் என்றும் பெருந்தொற்று காலத்தில் அவர்களின் பணி என்பது மிகவும் அசாதாரணமானது என்றும் அந்தப் பணிகளின் காரணமாகவே அவர்களில் ஏராளமானவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர், பலர் உயிரிழந்தனர் என்றும் தெரிவித்த அவர், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது சுகாதர பணிகளின் மேற்கொண்ட அவர்களை பல்வேறு வழிகளில் ஊக்கப்படுத்தி அவர்களின் முன்னேற்றத்துக்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

‘அமித் ஷாவுக்கு போன் போட்டா கலவரம் ஆகிடும்’ – மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர்கள் கைது

மேலும், முன்களப் பணியாளர்களின் பணிகளை நிரந்தரமாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரி வந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் பணி செய்து வந்த சுமார் 700 பேர் எவ்வித முன்னறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தனியாருக்கு நகரின் தூய்மை பணியைத் தாரை வார்த்து, 10 வருடங்களாக நகரின் தூய்மைப் பணிக்காக தியாகம் செய்தவர்களை தூக்கிவீசுவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

அதானியின் இலாபவெறிக்குப் பலியாகப் போகும் சென்னை – பூவுலகின் நண்பர்கள்

“கொரோனா பெருந்தொற்று காலத்தில் போற்றப்பட வேண்டியவர்களாக அரசால் சுட்டிக்காட்டப்பட்டவர்களை இன்று அந்த அரசே போய் வாருங்கள் என தூக்கி வீசுவது உள்ளபடியே வேதனை அளிக்கின்றது” என்றும் நெல்லை முபாரக் அறிக்கையில் கூறியுள்ளார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட 700 தொழிலாளர்களின் பணி நீக்கத்தை உடனடியாக ரத்து செய்வதோடு, கொரோனா முன்களப் பணியார்களான அவர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவர்களை நிரந்தரமாக்க வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்