Aran Sei

சென்னை: பிஎஸ்பிபி பள்ளி சேர்க்கைக்கு லஞ்சம் பெற்றதாக பாஜக நிர்வாகி மதுவந்தி மீது புகார்

த்ம சேஷாத்ரி பள்ளியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ 6 லட்சத்தை மோசடி செய்ததாக அப்பள்ளி நிர்வாகியும் பாஜகவை சேர்ந்தவருமான மதுவந்தி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் கிருஷ்ண பிரசாத். இவர் அதே பகுதியில் கோவிந்தன் சாலையில் உள்ள ஒரு கோயிலின் நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை கிருஷ்ணபிரசாத் அளித்துள்ளார். இதையடுத்து மோசடி புகார் தொடர்பாக செய்தியாளர்களையும் கிருஷ்ண பிரசாத்தின் வழக்கறிஞர் முத்துகுமார் சந்தித்துள்ளார்.

அல்ஜசீரா செய்தியாளர் ஷிரீன் அபு அக்லே இஸ்லாமிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் – ஐநா மனித உரிமைகள் விசாரணையில் தகவல்

இது குறித்து வழக்கறிஞர் முத்துகுமார் கூறுகையில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கிருஷ்ணபிரசாத் நிர்வகித்து வரும் கோயிலுக்கு நடிகர் ஒய் ஜி மகேந்திரனின் மகளும் பாஜக நிர்வாகியுமான மதுவந்தி வந்து செல்கிறார். அப்போது கிருஷ்ணபிரசாத்திடம் தான் பிஎஸ்பிபி பள்ளியை நிர்வகித்து வருவதாகவும் பள்ளியில் சேர்க்க விரும்புவோர் தலா 3 லட்சம் கொடுத்தால் சீட்டு வாங்கி தருவதகவும் மதுவந்தி தெரிவித்தார்.

இதையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோயிலுக்கு வரும் 8 நபர்கள் சீட்டு கேட்டு கிருஷ்ணபிரசாத்திடம் கொடுத்த 19 லட்சத்தை மதுவந்தியிடம் அவரது இல்லத்தில் வைத்து கொடுத்துள்ளார். பணம் கொடுத்தும் நீண்ட மாதங்களாகியும் சீட் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

சிவசேனாவை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என பாஜக நினைக்கிறது – மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

அப்போது அச்சமடைந்த மதுவந்தி ரூ 13 லட்சத்தை பெற்றோர்களிடம் திருப்பி கொடுத்துவிட்டார். மீதமுள்ள ரூ 6 லட்சத்தை தரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் கிருஷ்ணபிரசாத்திடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். பணம் குறித்து மதுவந்தியிடம் கிருஷ்ணபிரசாத் கேட்டுள்ளார்.

அதற்கு கிருஷ்ணபிரசாத்தை மதுவந்தி அடியாட்களை வைத்து தாக்கியுள்ளார். தாக்கியது தொடர்பாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில் கிருஷ்ணபிரசாத் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது ஆதாரங்களை சமர்பித்து மதுவந்தியிடம் பணத்தை மீட்டு கொடுக்குமாறு காவல் ஆணையரிடம் புகார் அளித்தோம் என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமை மீறல் – இந்தியாவை கண்டித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீர்மானம்

இதுகுறித்து மதுவந்தி கூறுகையில் பிஎஸ்பிபி பள்ளி எங்களுடையது. நான் ஏன் பணம் வாங்க வேண்டும். கிருஷ்ண பிரசாத் அளித்த புகார் முற்றிலும் பொய். பணத்தை அவர் ஏமாற்றிவிட்டு என் மீது கிருஷ்ணபிரசாத் பழி போடுகிறார் என்று கூறியுள்ளார். மேலும், கிருஷ்ணபிரசாத் மீது மதுவந்தி பதில் புகார் அளித்துள்ளார்.

சாமி சொத்தை திருடினா மனசு புண்படாதா I Thillai Chidambaram Temple I Deekshithar Atrocities

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்