Aran Sei

சத்திஸ்கரில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட விவசாயி – சட்டப்பேரவையை முடக்கிய பாஜக

சத்தீஸ்கர் மாநிலத்தில், குடும்பத்துடன் விவசாயி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது தொடர்பாக, விரிவான விசாரணை கோரி, சட்டப்பேரவை நிகழ்வுகளை எதிர்கட்சியான பாஜக முடக்கி வருவதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெலின் சொந்த மாவட்டமான துர்க் பகுதியில், விவசாயி ராம்பிரிஜ் கெய்க்வாட் குடும்பம் உயிரிழந்தது தொடர்பாக, பாரபட்சமற்ற விசாரணையை பாஜக கோருவதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 7 ஆம் தேதி இரவு, துர்க் மாவட்டத்தில், பதீனா கிராமத்தை சேர்ந்த விவசாயி ராம்பிரிஜ் கெய்க்வாட் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருந்தனர்.

‘பாலின சமத்துவமின்மையை அனுமதிப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது’ – தேசிய பாதுகாப்பு தேர்வில் பெண்களை அனுமதிக்காதது குறித்து உச்சநீதி மன்றம் கருத்து

இது அந்த பகுதியில், குடும்பத்துடன் விவசாயி இறக்கும் இரண்டாவது நிகழ்வு. கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி, குத்முதா கிராமத்தில், நிலத்தகராறு காரணமாக, பலராம் சோங்கர் என்ற விவசாயியின் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

ராம்பிரிஜ் கெய்க்வாட் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக கூறிய காவல்துறை, தற்போது  மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொன்று, வீட்டின் கொல்லைப்புறத்தில் இறுதி சடங்கு நடத்திய பிறகு, ராம்பிரிஜ் மற்றும் அவரது மகன் தூக்கில் தொங்கியிருக்கினர் எனக் கூறியுள்ளதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ராம்பிரிஜ் எழுதி வைத்திருந்த 10 பக்க தற்கொலை கடிதம் கிடைத்திருப்பதாகவும், அதை வைத்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், துர்க் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் குற்ற வழக்கு புள்ளிவிவரங்கள்

கைப்பற்றப்பட்ட கடிதத்தின் மூலம், ராம்பிரிஜிற்கு வர வேண்டிய கடன் நிலுவை ரூபாய் 7 லட்சம் மற்றும் ராம்பிரிஜ் அளிக்க வேண்டிய கடன் தொகை ரூபாய் 4.5 லட்சம் கொடுத்த அழுத்ததின் காரணமாகவே இது நடைபெற்று இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக, தி வயர்  தெரிவித்துள்ளது.

ராம்பிரிஜ் குடும்பத்தினரின் மரணத்திற்கு கடன் பிரச்னை, நிலத்தகராறு என அதிகாரப்பூர்வமற்ற பல காரணங்கள் சொல்லப்பட்டு வரும் நிலையில், எதிர்கட்சியான பாஜக, ராம்பிரிஜ் குடும்ப பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரிக்கப்பட்டனர், இதை மறைக்க ராம்பிரிஜ் மற்றும் அவரது மகனை தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் என குற்றம் சாட்டுவதாக, தி வயர்  செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவையை நடத்த விடாமல் பாஜக தடுத்து வருவதாக, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல் குற்றம்சாட்டி இருந்த நிலையில், மார்ச் 28 ஆம் தேதி வரை சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்