Aran Sei

பிராமணர்களை புறக்கணிக்க வேண்டும் என பேசிய முதலமைச்சரின் தந்தை – 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

பிராமணர்களைப் புறக்கணியுங்கள் என பேசிய சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலின் தந்தை நந் குமார் பாகலுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

”பிராமணர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள், அவர்களைப் புறக்கணிக்க வேண்டும். அவர்களைக் கிராமத்திற்குள் அனுமதிக்க கூடாது” என நந் குமார் பாகல் தெரிவித்திருந்தார்.

இதனை எதிர்த்து ’சர்வ பிராமண சமாஜ்’ என்ற அமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பெயரில், அவர்மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள்   153 – A, 505 (1) -ன் கீழ் வழக்கு பதியப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த முதலமைச்சர் பூபேஷ் பாகல், “எனது தந்தையின் கருத்துகள் மனதை புண்படுத்துகிறது. எனது அரசில் சட்டத்தைவிட யாரும் உயர்ந்தவர்கள் இல்லை” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பதியப்பட்ட வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்பட்ட நந் குமார் பாகலுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source : ANI

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்