Aran Sei

சத்தீஸ்கரில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியவரைத் தாக்கிய மாவட்ட ஆட்சியர் – பணிநீக்கம் செய்து முதலமைச்சர் உத்தரவு

த்தீஸ்கர் மாநிலம் சுராஜ்புர் மாவட்டத்தில், கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றவில்லை என்றுக்கூறி ஒருவரைத் தாக்கிய மாவட்ட ஆட்சியர் ரன்பிர் ஷர்மாவை சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் புபேஷ் பாகெல் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

திரிணாமுல் கட்சியினர் தாக்கியதில் 5 பாஜகவினர் உயிரிழந்ததாக புகார் – விசாரணைக்கு உத்தரவிட்ட ஆளுநர்

நேற்றையதினம் சுராஜ்புர் மாவட்ட ஆட்சியர் ரன்பிர் ஷர்மா, கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத  நபரைத் கன்னத்தில் அறைந்து, அவரது தொலைபேசியை உடைத்து அவரை காவல்துறையிடமும் ஒப்படைத்துள்ளார்.

இதுகுறித்தக் காணொளி இணையத்தில் பரவியதை அடுத்து அம்மாநில முதலமைச்சர் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,” இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளப்பதிவுகளின் வழியாக தெரிந்து கொண்டேன். இது முற்றிலும் வருத்தத்துக்குரியது, கண்டிக்கத்தக்கது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொள்ள இயலாது” என்றும் கூறியுள்ளார்.

‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லமறுத்த இந்து சிறுவன் – தாக்கிய பாஜக தொண்டர்

இந்நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆட்சிப்பணியாளர்கள் கூட்டமைப்பு, ”சுராஜ்புர் மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக கண்டித்துள்ளது, மேலும் இக்கட்டான சூழ்நிலைகளில் ஆட்சியர்கள் அனுதாபத்தோடு செயல்படவேண்டும்” என்று கூறியுள்ளது.

source; the new indian express

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்