Aran Sei

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று – மருத்துவப் பொருட்களின் கள்ளச் சந்தை விலை பல மடங்கு உயர்வு : பிபிசி ஆய்வு

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், மருந்துகளும் மருத்துவப் பொருட்களும் பல மடங்கு கூடுதல் விலைக்கு கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றன.

இந்தியாவில் நாளொன்றுக்கு 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் மருத்துவமனைகளில்  படுக்கைகள்  இல்லாமல், நோயாளிகள் திருப்பி அனுப்பபடுகின்றனர்.

கொரோனா நோயாளிக்குச் சிகிச்சை அளிக்க தேவைப்படும் வென்டிலேட்டர்களுக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

“கொரோனா சிகிச்சைக்கு 152 ஆக்சிஜன் படுக்கைகளே உள்ளதாக அறிவித்த மாநகராட்சி – அசாதாரண சூழலை நோக்கிச் செல்கிறதா குஜராத்?

மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அவற்றின் கள்ளச்சந்தை விலை  விண்ணைமுட்டும் அளவிற்கு உயர்ந்திருப்பதாக பிபிசி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்திய சந்தையில், 5,935 ரூபாய்க்கு  விற்கப்பட்டு வந்த 50 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர், கள்ளச் சந்தையில் 98,660 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 68,985 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ஆக்சிஜன் கான்சென்ட்ரேடர் விலை மூன்று மடங்கு உயர்ந்து 1,97,320 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.

Photo Credit : Statista

அதே போன்ற உயிர் காக்கும் மருந்துகளின் விலையும் பல மடங்காக உயர்ந்துள்ளது. 3,900  ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த ரெம்தேசிவிர் மருந்தின் விலை, 74,180 ரூபாயாக உயர்ந்துள்ளது.

Source : Statista

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்