2018-ம் ஆண்டில் கட்டிட உள் வடிவமைப்பாளருக்குப் பணம் தராமல் தற்கொலைக்குத் தூண்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸாமி உள்பட 3 பேருக்கு எதிராக மும்பை காவலர்கள் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு கட்டிட வடிவமைப்பாளர் அன்வி நாயக் பணிகளுக்குப் பணம் தராமல் ரிபப்ளிக் தொலைக்காட்சி இழுத்தடித்ததால் அவரும், அவரின் தாயார் குமுத் ஆகியோர் தற்கொலை செய்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
ஸ்கிமீடியாவின் உரிமையாளரான ஃபெரோஸ் ஷேக்கும் ஸ்மார்ட்வொர்க் நிறுவனத்தின் உரிமையாளரான நீதிஷ் சர்தாவும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர்.
ஸ்கிமீடியாவின் உரிமையாளரான ஃபெரோஸ் ஷேக்கும் ஸ்மார்ட்வொர்க் நிறுவனத்தின் உரிமையாளரான நீதிஷ் சர்தாவும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர்.
“ஒப்பந்தத்தின்படி அன்வி நாயக் அணைத்து வேலைகளையும் முடித்துவிட்டார். குற்றச்சாட்டப்பட்டவர்கள் கூடுதலாகக் கொடுத்த பணிகளையும் அவர் செய்துள்ளார். ஆனால், அவருக்குக் குற்றச்சாட்டப்பட்டவர்கள் வழங்கவேண்டிய பணத்தை முழுமையாக வழங்கவில்லை” என்று குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக செய்தியில் குறிப்பிடபட்டுள்ளது. வடிவமைப்பு, பிளம்பிங், பொறியில் உள்ளிட்ட பல பணிகளில் அன்வி நாயக் ஈடுபட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த விவகாரத்தில் தற்கொலைக்குத் தூண்டியதாக உயிரிழந்தவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை அடுத்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அப்போது, மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர், தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த வழக்கின் விசாரணையில் அன்வி நாயகை தற்கொலைக்குத் தூண்டிய குற்றச்சாட்டில் அர்னாப் கோஸ்வாமியை ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் காவலர்கள் கடந்த மாதம் 4-ம் தேதி கைது செய்தனர். கடந்த மாதம் 11-ம் தேதி அர்னாப் கோஸ்வாமிக்குப் பிணை வழங்கப்பட்டது.
இந்நிலையில், அர்னாப் கோஸாமி, ஃபெரோஷ் ஷேக், நிதிஷ் ஷரதா ஆகியோருக்கு எதிராக அலிபாக் நீதிமன்றத்தில் காவலர்கள் 1,914 பக்க குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.
காவலர்கள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யக் கூடாது என்றும் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் அர்னாப் கோஸாமி தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனு இதுவரை விசாரிக்கப்படவில்லை.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.