Aran Sei

வகுப்பு வாதத்தை தூண்டியதாக பத்திரிகையாளர் சித்திக் கப்பான் மீது குற்றச்சாட்டு – குற்றப்பத்திரிகை தக்கல் செய்த காவல்துறை

Credits : The News Minute

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின், மூளையாக சித்திக் கப்பான் செயல்பட்டிருப்பதாகவும், திட்டமிட்டு இந்துக்களுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டிருப்பதாகவும், சித்திக் கப்பான் வழக்கை விசாரிக்கும், சிறப்பு அதிரடி படை (எஸ்டிஎஃப்) தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ஒரு மலையாள செய்தி இணையதளத்தில் பணிபுரிந்து வந்த சித்திக் கப்பான், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி, ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு சம்பவத்தைப் பற்றி செய்தி சேகரிப்பதற்காக, உத்தர பிரதேச மாநிலத்துக்குச் சென்றார். அவரை ஹத்ராசுக்குள் நுழைய விடாமல் வழிமறித்த காவல்துறையினர், ”பொது அமைதிக்கு குந்தகம்” விளைவிப்பதாகக் கூறி கைது செய்தனர்.

அவருடன் செய்தி சேகரிக்க சென்ற சக ஊழியர்களான அதிக் உர் ரஹ்மான், மசூத் அகமது ஆலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சித்திக்கினுடைய லேப்டாப், மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

உத்தர பிரதேசத்தில் ஒரு பெரிய சதித் திட்டத்தை அரங்கேற்ற, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பின்னணியில் சித்திக் செயல்பட்டதாக, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த மதுரா காவல்துறை, அவர்மீது தேசதுரோக சட்டத்தின் கீழும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் (UAPA) வழக்கு பதிவு செய்தது.

பத்திரிக்கையாளர் சித்திக் காப்பானின் தாயார் மரணம் – உடல்நலக் குறைவால் மரணம்

இந்நிலையில், மலையாள செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்த சித்திக் கப்பான், தப்லிகி ஜமாத், தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம், வடகிழக்கு டெல்லி கலவரம், அயோத்தி ராமர் கோயில் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் எழுதியுள்ள 36 கட்டுரைகளை இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு அதிரடி படை (எஸ்டிஎஃப்) தாக்கல் செய்துள்ள 5000 பக்க குற்றப்பத்திரிகையில் இணைத்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மதுரா சிறைக்கு சித்திக் கப்பன் மாற்றம் – உச்சநீதிமன்ற உத்தரவை அவமதித்ததா உத்திரபிரதேச அரசு?

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக சித்திக் கப்பான் எழுதியதை குறிப்பிட்டிருக்கும் எஸ்டிஎஃப், ”சித்திக் கப்பானுடைய எழுத்துக்களில், காவல்துறையின் வன்முறைகளால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படும் அப்பாவிகள் போலவும், பாகிஸ்தான் செல்வதற்கு நிர்பந்திக்கப்படுவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சித்திக் கப்பானுடைய எழுத்துக்கள் இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுவதற்கு தான் என்பது நிருபணமாகிறது” என்று தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியான செய்தி கூறுகிறது.

‘சித்திக் காப்பானை டெல்லி மருத்துவமனைக்கு மாற்றுங்கள்’ – உத்தரபிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

”சித்திக் கப்பானின் பெரும்பான்மையான எழுத்துக்கள் வகுப்புவாதத்தை தான் ஊக்குவிக்கின்றன. ஒரு கலவரச் சூழலில், சிறுபான்மையினர்களின் பெயரை குறிப்பிட்டு, அவர்களுக்கு நடந்த பிரச்சனைகள் தொடர்பாக எழுதுவது, அவர்களின் உணர்வுகளைத் தூண்டுவிடுவதாகும். ஒரு பொறுப்புள்ள செய்தியாளர், வகுப்புவாதத்தை தூண்டமாட்டார். கப்பானுடைய செய்தி சேகரிப்பு முழுவதுமே இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுவதற்கு தான், இது தான் பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃபஐ) மறைமுக செயல்திட்டம். மாவோயிஸ்டுகளுக்கும், கம்யூனிஸ்டுகளுக்கும் ஆதரவாகவும் சில கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன” என்று எஸ்டிஎஃப் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரசில் செய்தி வெளியிட்டுள்ளது.

பத்திரிகையாளர் சித்திக் காப்பான் மருத்துவ அறிக்கை – உத்தரபிரதேச அரசு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

பிஎஃப்ஐயின் மூளையாக சித்திக் கப்பான் செயல்பட்டிருப்பதாகவும், திட்டமிட்டு இந்துக்களுக்கு எதிரான செய்திகளை வெளியிட்டிருப்பதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

சித்திக் காப்பானுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் – யோகி ஆதித்யநாத்திற்கு பினரயி விஜயன் கடிதம்

ஹத்ராஸ் பாலியல் குற்றத்தில் ஈடுப்பட்ட தாக்கூர் சமூகத்துக்கு எதிராக மக்களை தூண்டிவிட்ட சித்திக் கப்பான் மற்றும் அதிக் உர் ரஹ்மான், ஹத்ராஸ் மக்களிடையே உரையாற்றியதாகவும், மக்களிடம் பணம் கொடுத்தாகவும் இருவர் பார்த்த இருவர் எஸ்ஐடியிடம் சாட்சியம் அளித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திக் காப்பான் மரணமடைய நேரிடும் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள சித்திக்கின் மனைவி

இதை முற்றிலுமாக மறுத்துள்ள சித்திக் கப்பானின் வழக்கறிஞர், மதுவன் தத், ”இவை அனைத்தும் பொய்யான சாட்சியம். ஹத்ராஸ் செல்லும் வழியிலேயே சித்திக் கப்பான் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர். அந்த கிராமத்துக்குள் நுழையவே இல்லை” என தெரிவித்துள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்