Aran Sei

‘கொரோனா காலத்தில் சார் தாம் புனிதயாத்திரை நடத்துவது முட்டாள்தனமானது’ – உத்தரகண்ட் அரசின் முடிவுக்கு நீதிமன்றம் எதிர்ப்பு

த்தரகண்ட் மாநிலத்தில் சார்தாம் யாத்திரை நடத்தப்படவிருப்பதாக அறிவித்துள்ள மாநில அரசின் முடிவு “நடைமுறைக்கு ஒவ்வாத முட்டாள்தனமானது” எனக் கூறி, உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டுமென த்தரகண்ட்  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரகண்ட் உயர்நீதிமன்ற நீதிபதிகளான ஆர்.எஸ்.சர்மா மற்றும் அலோக் வர்மா ஆகியோர் கடந்த ஜூன் 23 வழங்கியுள்ள உத்தரவில்,” அமர்நாத் யாத்திரை ஒத்திவைக்கப்பட்டதைப் போன்று சார் தாம் யாத்திரையும் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது ஒத்திவைக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்ததாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவலால் ‘சார் தாம்’ புனித யாத்திரைக்கு தடை – உத்தரகண்ட் முதலமைச்சர் அறிவிப்பு

 

மேலும், “தற்போதைய கொரோனா சூழலிலும், ருத்ரபிரயாக், சாமோலி மற்றும் உத்தரகாஷி ஆகிய பகுதிகளில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பார்க்கும் போது, யாத்திரை நடத்துவதென்பது அப்பகுதி மக்களுக்கு மட்டுமல்லாது பரந்துபட்ட அளவிலும் கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும்” என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, வரும் காலங்களில் சார்தாம் தாம் யாத்திரை நடத்திக்கொள்ளலாம் என்றும், தற்போது நடத்துவது நடைமுறைக்கு ஒவ்வாத மூடத்தனமானது என்று உயர்நீதிமன்ற அமர்வு கூறியுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

‘முதலில் கும்பமேளா, இப்போது புனிதயாத்திரை; தவறுகளிலிருந்து எதையும் கற்கவில்லையா?’ – உத்தரகாண்ட் அரசிற்கு உயர்நீதிமன்றம் கேள்வி

 

மேலும், இந்த யாத்திரை நடைபெறாததால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பக்தர்களின் நலனுக்காக சார்தாம் யாத்திரையை நேரலையில் ஒளிபரப்பலாம் என்றும் நீதிபதிகள் ஆர்.எஸ்.சர்மா மற்றும் அலோக் வர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு வலியுறுத்தியுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்