Aran Sei

கும்பமேளாவை தொடர்ந்து சார் தாம் புனித யாத்திரைக்கு அனுமதி: கொரோனாவை அலட்சியப்படுத்துகிறதா உத்தரகாண்ட் அரசு?

த்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும்  ஹரித்வார் கும்பமேளாவைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் நடத்தப்பட இருக்கும் ’சார் தாம் யாத்ரா’ என்ற புனித யாத்திரை அடுத்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

ஆண்டுதோறும் கோடைகாலத்தில், உத்தரகாண்ட்டில் அமைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய நான்கு இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு இந்து மதத்தினர் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். அது ’சார் தாம் யாத்ரா’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான ’சார் தாம்’ புனித யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்கள், கொரோனா தொற்றில்லா சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

கும்பமேளாவில் பங்கேற்று கொரோனா சிகிச்சை பெற்றுவந்தோர் தப்பியோட்டம் : 20 பேர் மீது வழக்குகள் பதிந்த காவல்துறை

இதுதொடர்பாக பேசிய உத்தரகண்ட் சுற்றுலாதுறை அமைச்சர் சத்பால் மகாராஜ், “கொரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்த சார் தாம் யாத்திரைக்கு கொரோனா தொற்றில்லா சான்றிதழைக் கட்டாயமாக்கியுள்ளோம். இந்த யாத்திரையானது ஒரு நம்பிக்கைசார் விஷயம். இந்த யாத்திரைக்காக உலகம் முழுவதிலும் இருந்து வரும் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா, உத்திரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில், பல லட்கணக்கணக்கான மக்கள் கும்பமேளாவில் பங்கேற்று வருகின்றனர்.

‘கும்பமேளா சென்றவர்கள் கொரோனாவை பிரசாதமாக மக்களுக்கு வழங்கக்கூடாது’ – மும்பை மேயர் எச்சரிக்கை

கும்பமேளாவில் பங்கேற்றவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் முதல் கட்டத்தில் 2,171 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த வாரத்தில் (ஏப்ரல் 11-17) மட்டும் 13,924 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் கும்பமேளாவில் பங்கேற்க வந்த சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இன்னும் பலருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கின்றன என ஹரித்வார் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் நடக்கும் திருமணங்கள் மற்றும் பிற பொது நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஹரித்வாரில் நடந்து வரும் கும்பமேளாவிற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்று குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்