Aran Sei

கர்நாடகா: சன்னகேசவ ஆலயத்தில் குரான் ஓதி தொடங்கப்பட்டது தேரோட்டம்

த நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், கர்நாடக மாநிலம் பேலூரில் நடக்கும் புகழ்பெற்ற சன்னகேசவ தேர் திருவிழாவின் போது, தேர் முன் நின்று இஸ்லாமிய மதகுரு ஒருவர் குரான் வசனங்களை ஓத, தேரோட்டம் தொடங்கியுள்ளது.

பேளூரில் நேற்று (ஏப்ரல் 13) நடைபெற்ற தேர் திருவிழாவை காண அம்மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி, அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

கர்நாடகா: இஸ்லாமிய மாம்பழ வியாபாரிகளைக் குறிவைக்கும் இந்துத்துவ வலதுசாரி அமைப்பினர்

சன்னகேசவர் சாமி சிலை வைக்கப்பட்ட தேரின் முன், இஸ்லாமிய மதகுரு சையத் பாஷா காத்ரி, குரான் வசனங்களை ஓத, பேலூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் கே.எஸ்.லிங்கேஷ் தலைமையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துள்ளனர்.

அர்ச்சகர்களான கிருஷ்ணசுவாமி பட் மற்றும் சீனிவாச பட் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி, பக்தர்கள் சரியாக காலை 11:20 மணிக்கு தேர் இழுக்கத் தொடங்கியுள்ளனர்.  பாரம்பரிய முறைப்படி, பக்தர்கள் தேர் மீது வாழைப்பழம், மலர்களை பொழிந்துள்ளனர்.

Source: New Indian Express

தமிழ்நாட்டை கலவரக்காடாக ஆக்க துடிக்கும் H Raja…… பியூஷ் மனுஷ் நேர்காணல்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்