Aran Sei

உத்தரபிரதேச சட்டபேரவை தேர்தலில் போட்டியிடும் ஆசாத் சமாஜ் கட்சி ’ – ’பீம் ஆர்மி’ சந்திரசேகர் ஆசாத் அறிவிப்பு

டுத்த ஆண்டு நடக்கவுள்ள உத்தரபிரதேச சட்டபேரவைத் தேர்தலில், 403 இடங்களிலும் தனது கட்சி போட்டியிடும் என்று ஆசாத் சமாஜ் கட்சித் தலைவரும் பீம் ஆர்மியின் தலைவருமான சந்திரசேகர் ஆசாத் அறிவித்துள்ளார்.

நேற்று (ஜூலை 8), உத்தரபிரதேச மாநிலம் புலந்தசகர் மாவட்டத்தில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் சந்திரசேகர் ஆசாத் கலந்துக்கொண்டுள்ளார்.

அப்போது பேசிய அவர், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, குற்றச்செயல்களை குறைத்தல், பெண்களுக்கான அதிகாரம், உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி உரிமை ஆகிய பிரச்சனைகளை எதிர்த்து எங்கள் கட்சி செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

வளர்ந்து வரும் 100 தலைவர்கள் பட்டியலில் சந்திரசேகர் ஆசாத் – டைம்ஸ் பத்திரிகை அறிவிப்பு

ஒன்றிய அரசு தனது அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்துள்ளதை குறித்து பேசுகையில், அமைச்சரவையை மாற்றுவதால் பயனில்லை என்றும் உண்மையில் மாற்ற வேண்டியது ஒன்றிய அரசாங்கத்தைதான் என்றும் சந்திரசேகர் ஆசாத் விமர்சித்துள்ளார்.

மேலும், “உத்தரபிரதேசத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. ஆனால், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைதி காத்து வருகிறார்.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் மொத்தம் 403 சட்டபேரவை தொகுதிகள் உள்ளன. அடுத்த ஆண்டு, யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.

Source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்