மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் இன்று(ஜனவரி 3) நடைபெறவுள்ள நிலையில், பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத், ஓபிசி மகாசபையின் தேசிய பொதுச் செயலாளர் துளசிராம் படேல் உள்ளிட்ட பலர் நேற்று(ஜனவரி 2) கைது செய்யப்பட்டுள்ளனர்.
2023ஆம் ஆண்டு மத்திய பிரதேச சட்டபேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இதர பிற்படுத்தப்பட்ட சமூகம், பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியினர் அடங்கிய மூன்றாவது அரசியல் கூட்டணியை அமைக்கவுள்ளதாக துளசிராம் படேல் தெரிவித்துள்ளனர்.
EWS க்கான வருமான உச்ச வரம்பு 8 லட்சமாகவே தொடரும் – உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
பீம் ஆர்மி மற்றும் பழங்குடியினர் அமைப்பான ஜெய் யுவ ஆதிவாசி சக்தி ஆகியவை ஓபிசி இட ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தில், ஓபிசி அமைப்புகளுடன் இன்று போபாலில் நடைபெறவுள்ள போராட்டங்களில் பங்கேற்க உள்ளதாக அறிவித்திருந்தது.
நேற்று(ஜனவரி 2), போபால் விமான நிலையத்தில் இருந்து பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போபால் நகரின் அனைத்து எல்லைகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, போபால் காவல்துறை ஆணையர் மகரந்த் தியோஸ்கர் கூறுகையில், “நாங்கள் சுமார் 1500 போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்பியுள்ளோம். அவர்கள் ரோஷன்புரா சதுக்கத்தில் இருந்து முதலமைச்சரின் வீட்டிற்குச் செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல் நாத், காவல்துறையில் செயல்பாடு நேர்மையற்றது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
Source: NDTV, New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.