Aran Sei

சந்திராயன் 2 சேமித்த தரவுகள் – பொதுமக்களுக்கு வெளியிட்டது இஸ்ரோ

சந்திராயன் – 2 சேமித்த தரவுகளை , பொதுமக்களுக்கு வெளியிடவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ( இஸ்ரோ) தெரிவித்துள்ளது என தி இந்து இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு, ஜூலை 22 அன்று, சந்திராயன் – 2, ஆந்திர பிரதேசத்தின் சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

2019 செப்டம்பர் நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட சந்திராயனின் ஆர்பிட்டரில் சந்திர அறிவியல் குறித்து மேலும் தெரிந்து கொள்ள உதவும் எட்டு பரிசோதனைகள் உள்ளன.

அறிவியல் மாநாட்டில் மத பிரச்சார அமைப்புகளா? – சு.வெங்கடேசன் கேள்வி

அவை குறித்து,“பரிசோதனைகள் அனைத்தும் சிறப்பாக செயல்படுகின்றன. சந்திராயன் ஏவப்படுவதற்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு உதவும் வகையில் தகவல்கள் கிடைத்திருக்கின்றன” என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் தகவல் மையத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவுகளின் முதல் பாகம் வியாழன் அன்று வெளியிடப்படும் என இஸ்ரோ தெரிவித்ததாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

மேலும், “சந்திராயன் 3-க்கான வேலைகள் தொடங்கியுள்ளன. ஆனால், அதை விண்ணில் ஏவ இன்னும் தேதி தேர்வு செய்யப்படவில்லை” என இஸ்ரோ தலைவர் கே சிவன் தெரிவித்துள்ளதாக தி இந்து. செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்