Aran Sei

சதம் அடித்த டீசல் விலை – விலையேற்றம் தொடருமா?

கேரளா மற்றும் கர்நாடாகாவில் டீசல் விலை 100 ரூபாயைத் தொட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின்  விலை  உயர்வால் விலை ஏற்றப்பட்டுள்ளது.

எரிபொருள் விற்பனையாளர்களின் விலை அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 பைசாவும், டீசல் லிட்டருக்கு 35 பைசாவும் உயர்த்தப்பட்டது.

இந்த ஏழாவது நாள் விலை உயர்வு எரிபொருளின் விலை இதுவரை காணாத அளவில் உயர்ந்துள்ளது.

இந்து கோயில்களுக்கு வழங்கும் நிதி சிறுபான்மையினர்களுக்கு செல்கிறது – பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூர் குற்றச்சாட்டு

டெல்லியில் பெட்ரோலின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு லிட்டருக்கு 104.44 ஆகவும், மும்பையில் லிட்டருக்கு ரூ 110.41 ஆகவும் உயர்ந்துள்ளது.

மும்பையில், டீசல் இப்போது லிட்டருக்கு ரூ 101.03 க்கு வருகிறது; டெல்லியில் டீசல் விலை ரூ 93.17 ஆக உள்ளது

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோல் விலை ஏற்கனவே ரூ 100-க்கு மேல் இருக்கும் நிலையில், டீசல் விலை பல மாநிலங்களில் 100 ரூபாயை தொட்டுவிட்டது.

லக்கிம்பூர் வன்முறை: குடியரசுத்தலைவரை சந்திக்க காங்கிரஸ் முடிவு

திருவனந்தபுரத்தில் டீசலின் விலை லிட்டருக்கு ரூ 100.15.க்கு விற்கப்படுகிறது.

கர்நாடகாவில் ஷிமோகா மற்றும் தாவணகெரே உள்ளிட்ட சில நகரங்களிலும் இன்றும் டீசலின் விலை ரூ. 100ஐ தொட்டுள்ளது. பெங்களூருவில், டீசல் லிட்டருக்கு ரூ .98.85 க்கு விற்கப்படுகிறது.

கேரளா மற்றும் கர்நாடகாவைத் தவிர, ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் லடாக் ஆகிய இடங்களில் டீசல் லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டியுள்ளது.

 

Source: the Hindu

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்