Aran Sei

ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு – நீதிமன்றம் உத்தரவை ஏற்க மறுக்கும் ஒன்றிய அரசு

க்சிஜன் கான்செண்ட்ரேட்டர்கள் (காற்றிலிருந்து ஆக்சிஜனை பிரித்தெடுக்கும் கருவி) இறக்குமதி மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க முடியாது என, ஒன்றிய அரசு தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தனிநபர் பயன்பாட்டிற்கான ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர்கள் இறக்குமதி மீதான ஜிஎஸ்டி வரியை விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க முடியாத நிலை உள்ளோம் என ஒன்றிய அரசு தெரிவித்திருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லியை சேர்ந்த மூத்த குடிமகன் ஒருவருக்கு, அவரது மருமகன் வெளிநாட்டில் இருந்து அன்பளிப்பாக அனுப்பிய ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டருக்கு, 12 விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவு வழங்கியிருக்கும், வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த தேவையான பொருட்கள் மீது வரி விதிப்பதை எதிர்த்து அவர் வழக்கு தாக்கல் செய்தார்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு என நோட்டீஸ் வெளியிட்ட மருத்துவமனை – வழக்கு பதிவு செய்த உத்தரபிரதேச காவல்துறை

வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ஆக்சிஜன் கான்செண்ட்ரேட்டர் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ, டெல்லி உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தரை நீதிமன்றம் நியமித்தது.

இந்த வழக்கில், ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “நீதிமன்ற உத்தரவை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். ஆனால் ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைத்ததன் மூலம் அதிகபட்ச நிவாரணத்தை வழங்கி விட்டோம்” என தெரிவித்ததாக தி இந்து கூறுகிறது.

தொற்றுநோய் குறையும் வரை இதுபோன்ற அனைத்து இறக்குமதிகளுக்கான விலக்கையும் அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியதாக தி இந்து  செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்