Aran Sei

பற்றாக்குறையை போக்க 10 விழுக்காடு வரை நிலக்கரி இறக்குமதி – மின் உற்பத்தியாளர்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி

நிலக்கரி பற்றாக்குறையைப் போக்குவதற்காக தேவைப்படுவதில் 10 விழுக்காடு வரையிலான நிலக்கரியை இறக்குமதி செய்து கொள்ள மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளது.

மேலும், பற்றாக்குறையை காரணம் காட்டி, கூடுதல் விலைக்கு மின்சாரம் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், மாநிலங்களுக்கு வழங்கப்பட்டும் மின்சாரம் நிறுத்தப்படும் என அரசு கண்டித்துள்ளது.

‘வாட்சப் குழுவில் இருந்ததற்காக டெல்லி கலவர வழக்கில் குற்றவாளியாக்குகிறது காவல்துறை’ – உமர் காலித் குற்றச்சாட்டு

நிலக்கரி உற்பத்தியில் உலகின் இரண்டாம் இடத்திலும், கையிருப்பில் உலகின் நான்காம் இடத்திலும் இருக்கும் இந்தியாவிற்கு, கொரோனா பொது முடக்கத்திற்கு பிறகான பொருளாதார செயல்பாடுகள் பெரிய அளவில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த மின்சார உற்பத்தி நிலையங்களால் குறைந்த அளவிலேயே நிலக்கரி இறக்குமதி செய்ய முடியும். நாட்டில் மொத்தமுள்ள 135 அனல் மின் நிலையங்களில் சரிபாதியை மின்நிலையங்கள் தான் நாட்டின் மின்சாரத் தேவையில் 70 விழுக்காட்டை பூர்த்தி செய்கிறது. தற்போது இந்த மின் நிலையங்களில் இருக்கும் நிலக்கரி கையிருப்பு மூன்று நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக பல அனல் மின் நிலையங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பிகார், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் நாளொன்றுக்கு 14 மணிநேரம் வரை மின்தடை விதிக்க வேண்டிய நிர்பந்தத்தில் மாநில அரசுகள் உள்ளன.

ஒன்றிய அரசின் நிலக்கரி, சுரங்கம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை  அமைச்சர் பிரகலாத் ஜோஷி நிலக்கரி பற்றாக்குறை இல்லை என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில், “நிலக்கரி தட்டுப்பாடு என வரும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை. இந்தியாவில் எங்கும் தட்டுப்பாடு இல்லை. அமைச்சரின் கருத்தை நான் மீண்டும் ஒருமுறை கூறுகிறேன். இந்தியாவில் உள்ள அனைத்து அனல் மின் நிலையங்களிலும் அடுத்த நான்கு நாட்களுக்கான தேவை அவர்களிடம் உள்ளது. மேலும் விநியோக சங்கிலியிலும் எந்த பாதிப்பு இல்லை” என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், ”தட்டுப்பாடு ஏற்படும் அளவிற்கு எந்தப் பற்றாக்குறையும் இல்லை. இந்தியா மின் உற்பத்தியைக் கவனித்து வருகிறது. தற்போது நாங்கள் மின் மிகை நாடு” என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

Source : REUTERS

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்