Aran Sei

திரைப்படத்திற்கு மறுதணிக்கை செய்ய ஒன்றிய அரசுக்கு அதிகாரம் வழங்கும் மசோதா – மக்கள் கருத்துத் தெரிவிக்க ஜூலை 2 வரை அவகாசம்

பார்வையாளர்களின் புகார் அடிப்படையில் சான்றளிக்கப்பட்ட படத்திற்கு மறுசான்று அளிக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கும் வரைவு ஒளிப்பதிவு (திருத்த) மசோதா தொடர்பாக மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த மசோதா, நடைமுறையில் இருக்கும் திரைப்பட சான்றிதழுகளுக்கான மத்திய வாரியம் (சிபிஎஃப்சி, தணிக்கை குழு) செயல்பாடுகளுக்கு அப்பால் நேரடியாக ஒன்றிய அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜகமே தந்திரம்; திரைப்பிரதியும் அதன் பின்னணி அரசியலும் – முகமது இல்யாஸ்

”தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்ட படத்திற்கு தணிக்கை கோர அரசுக்கும் உரிமை இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்தைப் புறம்தள்ளும் வகையில், தேவைப்பட்டால் ஒரு திரைப்படத்திற்கு சான்றளிக்கப்பட்ட சிபிஎஃப்சியின் முடிவை மாற்றியமைக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு இந்த மசோதா மூலம் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய வரைவு, ஒன்றிய அரசு விரும்பினால் காட்சிகளை நீக்குவதற்கு கட்டாயப்படுத்தும் உரிமையை வழங்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. மேலும், திரைப்பட உள்ளடக்கத்தை மதிப்பிடுவதற்கான தொழில்முறை செயல்முறைக்கு பதிலாக அரசியல் செயல்முறைக்கு இந்த மசோதா வழிவகுக்கிறது.

நாங்கள் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்கு எதிரானவர்கள் இல்லை – ஜோடிக்கு பாதுகாப்பளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

கூடுதலாக, இந்த மசோதா திரைப்பட திருட்டிற்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கவும், வயதின் அடிப்படையிலான சான்றிதழ் வழங்கும் முறையை அறிமுகப்படுத்தவும் இந்த மசோதா வழி வகை செய்துள்ளது.

இந்த வரைவு மசோதா குறித்த கருத்துக்களை ஜூலை 2 ஆம் தேதிக்குள் அனுப்புமாறு பொது மக்களை ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்