கங்கை ஆற்றில் கொரோனா நோயாளிகளின் சடலங்கள் கண்டறியப்பட்ட பின்னர், ஆற்று நீர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், கொட்டப்படும் சடலங்களின் காரணமாக ஆற்று நீரின் தரத்தில் அதிக வேறுபாடு ஏற்படவில்லை என்று இந்திய ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, முன்னர், இந்திய ஒன்றியத்தின் நீர் சக்தி அமைச்சக செயலாளர் பங்கஜ் குமார், தேசிய இரசாயன ஆய்வகத்தால் பரிசோதனை செய்யப்பட்ட கங்கை ஆற்றின் நீர் மாதிரிகளைச் சமர்பிக்க ஒன்றிய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி), உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன் பின்னர் நடந்த கூட்டத்தில், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் தலைமைச் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது, ஒன்றிய அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் பிரசாந்த் கர்கவா பேசுகையில், ஆற்று நீரில் உள்ள உயிரியல் அளவுருக்களின் (பேராமீட்டர்ஸ்) படி, கங்கை ஆற்றில் எப்போதும் இருக்கும் நீரின் தரத்திற்கும், கொரோனா நோயாளிகளின் சடலங்கள் கொட்டப்படுவதற்கு பின்னான கங்கை ஆற்றின் நீரின் தரத்திற்கும் அதிக வேறுபாடு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, தொற்று கிருமியானது நீரில் பரவுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் ஆற்று நீரில் கிருமி உயிர்வாழும் வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் கூறியுள்ளார்.
Source; newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.