Aran Sei

தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பாக தரவுகள் இல்லை – ஒன்றிய உள்துறை அமைச்சகம் தகவல்

Credit: The Hindu

ன்றிய அரசின் விசாரணை அமைப்புகளால் சட்டப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி ஒட்டுக் கேட்புகள் தொடர்பான தரவுகள் பராமரிக்கப்படவில்லை என் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் ஆணையத்திற்கு எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்டுள்ள பதிலில், “குறிப்பட்ட காலக்கட்டத்தில் ஒன்றிய அரசின் 10 விசாரணை அமைப்புகளால் ஒட்டுகேட்கப்பட்டது தொடர்பான தரவுகளை வழங்க இயலவில்லை. ஒட்டு கேட்பு தொடர்பான தரவுகள் பராமரிக்கப்படவில்லைஎன கூறப்பட்டுள்ளது.

ஹிஜாப் விவகாரம்: எங்கள் நாட்டின் பிரச்சினை பற்றி அல்கொய்தா பேச தேவையில்லை – முஸ்கான் கான் தந்தை கருத்து

தந்தி சட்டம் 1885 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 பிரிவு 69 கீழ், ஒட்டுக் கேட்பு தொடர்பான தரவுகள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அழிக்கப்பட்டு விடுகிறது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய தகவல் ஆணையத்தில் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்திருக்கும் பிரமாண பத்திரத்தில், “மேற்கொண்டு விசாரணைக்குத் தேவைப்படாத இடைமறிப்புகள் மற்றும் இடைமறிப்புகள் தொடர்பான தரவுகள் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் அழிக்கப்பட்டு விடும். பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் போன்ற தேச நலன் சார்ந்த முக்கியமான வழக்குகளில் மட்டுமே ஒட்டுக் கேட்பு நடைமுறை பின்பற்றப்படுகிறதுஎன அரசு குறிப்பிட்டுள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் – விவாதிக்க மறுத்த மாநிலங்களவை தலைவர்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஜனவரி 1, 2016 மற்றும் டிசம்பர் 27, 2018க்கு இடையில் 10 விசாரணை அமைப்புகள் மேற்கொண்ட ஒட்டுக் கேட்பு எண்ணிக்கை தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 8ன் கீழ் தகவல்கள் தர வேண்டிய அவசியம் இல்லை என கூறி உள்துறை அமைச்சகத்தின் பொது அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு ஆணையமும் கேள்வியை நிராகரித்தனர்.

Source: The Hindu

தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடும் தமிழக அரசின் எதிவினையும்

விளக்குகிறார் மருத்துவர், சமூகச் செயற்பாட்டாளர் காந்தராஜ்

மேலும் அறிய லிங்க்கை கிளிக் செய்யவும்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்