Aran Sei

நெல்லில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்ய அனுமதி மறுக்கும் ஒன்றிய அரசு – சத்தீஸ்கர் முதலமைச்சர் புபேஷ் பாகல் குற்றச்சாட்டு

நெல்லில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்யவதற்கான கட்டமைப்பு இருந்தும் ஒன்றிய அரசு அனுமதி மறுப்பதாகச் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் புபேஷ் பாகல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்றைய தினம் ராய்பூரில் நடந்தக் கூட்டத்தில் பேசிய புபேஷ் பாகல், சத்தீஸ்கர் மாநிலம் தொழிற்சாலை மற்றும்  வணிகத்திற்கு  ஏற்றவாறு  இயற்கை வளமிகுந்ததாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்ஷீல்ட் தடுப்பூசியை அங்கீகரிக்காத இங்கிலாந்து அரசின் முடிவு – பாரபட்சமானது என ஒன்றிய அரசு குற்றச்சாட்டு

மேலும், இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், “நாங்கள் கரும்பு,நெல் மற்றும் சோளத்திலிருந்தும்  எத்தனால் உற்பத்தி செய்ய விரும்புகிறோம். நாங்கள் ஏற்கனவே அதற்கான தொழிற்சாலைகளை உருவாக்கியுள்ளோம். எங்களிடம் உபரியாக நெல் உள்ளது. எனவே, நெல்லிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்வதற்காக அனுமதி கேட்டு ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக அனுமதி கேட்டும் ஒன்றிய அரசு அனுமதி மறுத்து வருகிறது. இது தேசத்திற்கு இழப்பில்லையா?” என்றும் கூறியுள்ளார்.

‘டெல்லியில் இருப்பவர்கள் காஷ்மீரை ஒரு ஆய்வகத்தைபோல பயன்படுத்தி பரிசோதனைகள் செய்கிறார்கள்’ – மெஹபூபா முப்தி குற்றச்சாட்டு

அதுமட்டுமல்லாது, ஒருவேளை எத்தனால்  மற்றும் பிற பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டால் நாம் பெருமளவிலான தொகையைச் சேமிக்கலாம் என்றும் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் புபேஷ் பாகல் குறிப்பிட்டுள்ளார்.

Source:NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்