Aran Sei

அரசு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தனியார் வங்கிகளுக்கு அனுமதி – மத்திய அரசு அறிவிப்பு

னியார்மயமாக்கலை விரிவுபடுத்தும் விதமாக, அரசு தொடர்பான பரிவர்தனைகளை மேற்கொள்ளத் தனியார் வங்கிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

இதற்கு முன்னதாக வரி மற்றும் இதர வருவாய் செலுத்தும் வசதிகள், ஓய்வூதிய திட்டங்கள், சிறு சேமிப்பு திட்டங்கள் போன்ற அரசு தொடர்பான திட்டங்களில் ஈடுபட, ஒரு சில வங்கிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

குண்டு வெடிப்பு வழக்கில் கைதான பாஜக எம்.பி காவல்துறையால் தாக்கப்பட்டாரா? – மஹாராஷ்ட்ரா காவல்துறைக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது ட்விட்டர் பதிவில், ”அரசு பணிகளை மேற்கொள்ள தனியார் வங்கிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளும் இனி இதில் பங்குகொள்ளலாம். இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றுவதிலும், அரசின் சமூக நல முயற்சிகள் மற்றும் வாடிக்கையாளர் வசதிகளை மேம்படுத்துவதிலும், தற்போது  தனியார் வங்கிகளும் சம பங்கு வகிக்கின்றன” எனப் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து, மத்திய  அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவது மற்றும் செயல்படுத்துவதில், தனியார் வங்கிகள் முன்னணியில் உள்ளன. இந்த நடவடிக்கைகளின் மூலம், தனியார் துறை வங்கிகள் இப்போது இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியிலும், அரசாங்கத்தின் சமூகத் நல முயற்சிகளை மேம்படுத்துவதிலும் சம பங்காளிகளாக இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

தடையை நீக்கியதன் மூலம், அரசு தொடர்பான பரிவர்தனைகளை மேற்கொள்ளத் தனியார் துறை வங்கிகளுக்கு (பொதுத்துறை வங்கிகளுக்குக் கூடுதலாக) அங்கீகாரம் வழங்க ரிசர்வ் வங்கிக்கு இப்போது தடை இல்லை என்று, அரசாங்கம் ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்திருப்பதாக, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்