Aran Sei

திருவாரூர் மத்தியப் பல்கலைகழக தமிழ்த்துறையில் சமஸ்கிருத ஆசிரியர் – தமிழ்த்துறையில் சமஸ்கிருத திணிப்பா?

திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத் தமிழ் துறையில் கௌரவ விரிவுரையாளர் பணியிடத்திற்கு சமஸ்திருத ஆசிரியர் வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக பதிவாளர் பெயரில் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாகி இருக்கும் அறிவிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் துறையில் காலியாக உள்ள ஒரு கௌரவ விரிவுரையாளர் பணியிடத்திற்கு சமஸ்திருத ஆசிரியர் வேண்டும் என்றும், விண்ணப்பிக்கும் நபர் சமஸ்கிருந்தத்தில் முதுகலை படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும்,  முனைவர் பட்டம் அல்லது தேசிய தகுதி தேர்வில்(NET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புவர்கள் செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் விண்ணங்களை துறைத் தலைவருக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டும் என்றும், விரிவுரையாளருக்கான நேர்காணல் செப்டம்பர் 27 ஆம் தேதி இணையவழியில் நடைபெறும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆங்கிலம், இந்தி துறையில் இருக்கும் காலிப் பணியிடங்களுக்கு அந்தத் துறை சார்ந்த ஆசிரியர்கள் தேவை என அறிவித்திருக்கும் நிலையில், தமிழ் துறைக்கு மட்டும் சமஸ்கிருத ஆசிரியர் தேவை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்