Aran Sei

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு பாதுகாப்பு வழங்காத ஒன்றிய அரசு – உச்சநீதி மன்றத்தின் உத்தரவு என்ன ஆனது?

பொது முடக்கத்தின் போது நடந்து சென்ற புலம் பெயர் தொழிலாளர் குடும்பங்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா துறைகளைச் சேர்ந்தவர்களுக்கான உணவு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள உணவு மற்றும் பொது விநியோகத்துறை அளித்துள்ள பதில்களின் மூலம் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

’வீட்டுக் காவலில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளேன்’ – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

கொரோனா பெருந்தொற்று முடியும் வரை புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா துறைகளைச் சேர்ந்தவர்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் ஜுன் 29 ஆம் தேதி தெரிவித்திருந்தது.

மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவு தானியங்களைப் பெறுவதற்கு தகுதி உடைய மக்களின் அளவு மறுவரையறை செய்யப்படவில்லை என்பதை குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் ரேசன் அட்டைகளைப் பெறுவதற்கான தகுதி உடையவர்களின் மொத்த எண்ணிக்கையைத் தீர்மானிக்கவும் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது.

‘தமிழ் வானொலி நிலையங்களை முடக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்’ – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

கொரோனா பெருந்தொற்று நீடிக்கும் வரை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுத் தானியங்களை வழங்க பொருத்தமான ஒரு திட்டத்தை ஜூலை 31, 2021 ஆம் தேதிக்குள் செயல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அதற்கான கூடுதல் தானியங்களை  ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

இந்த உத்தரவுகள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்குக் கிடைத்த பதிலில் இருந்து, உத்தரவில் கூறப்பட்டதை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை என்பதைக் காட்டுகிறது என உணவு உரிமை செயல்பாட்டாளர் அஞ்சலி பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

வெறுப்புப் பிரச்சாரமும் இனப்படுகொலையும் – இனப்படுகொலை செய்தவர்களைக் காப்பாற்றுகிறதா ஃபேஸ்புக்?

”அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தள்ளி வைக்கப்படுள்ளது.  2023-24 ஆம் ஆண்டில் தான் இடைக்கால தரவுகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசாங்கங்கள் எந்த ஒரு திருத்தத்தையும் 3 ஆண்டுகளுக்குப் பிறகே மேற்கொள்ள வேண்டும் என நினைப்பது புலனாகிறது. அதாவது கொரோனாப் பெருந்தொற்று காலத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும் பொருளாதாரத்தில் நலவுற்ற மக்களுக்குக் கிடைக்கும் நிவாரணத்தை இது தடுக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடிமைப் பணித் தேர்வுகளில் பிற்படுத்தப்பட்டோரை விட மிகக் குறந்த மதிப்பெண்ணில் தேர்வாகும் முன்னேறிய வகுப்பினர் – கேள்விக் குறியாகிறதா சமூகநீதி?

ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டில் மாநிலங்களுக்குக் கூடுதலாக வழங்கப்பட்ட தானியங்கள் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்குக் கிடைக்கபெற்ற பதிலில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக கூடுதல் தானியங்களை மேகாலயா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் மட்டும் கோரியுள்ளது தெரியவந்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

மேலும், எந்த மாநிலங்களுக்கும் கூடுதல் உணவு தானியங்கள் வழங்கப்படவில்லை என அந்தப் பதிலில் கூறப்பட்டுள்ளது என்று அஞ்சலி பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

Source : The Wire

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்