Aran Sei

அருணாச்சலப் பிரதேசம்: மக்களின் எதிர்ப்பையும் மீறி ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீட்டித்த ஒன்றிய அரசு

ருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள திராப், சாங்லாங் மற்றும் லாங்டிங் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை இந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இன்று (ஏப்ரல் 1), இது தொடர்பான அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மேலும், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நம்சாய் மற்றும் மகாதேவ்பூர் காவல் நிலையங்களின் எல்லைக்குள் வரும் பகுதிகளிலும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

‘மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்க’ – இரோம் ஷர்மிளா

2021 டிசம்பர் 4 ஆம் தேதி, நாகாலாந்து மாநிலம், மோன் மாவட்டத்தில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற குரல்கள் வேகமாக ஒலிக்க துவங்கின.

இந்நிலையில், நேற்று (மார்ச் 31) நாகாலாந்து, அசாம், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்குவதாக ஒன்றிய அரசு முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1958ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை இந்திய நாடாளுமன்றம் இயற்றியது.

நாகாலாந்து, அசாம், மணிப்பூரின் சில மாவட்டங்களில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கம் – ஒன்றிய அரசு முடிவு

இந்தச் சட்டம் அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம் மற்றும் திரிபுரா மாநிலங்களின் ‘அமைதிக்குறைவான பகுதிகள்’ என்று குறிப்பிடும் இடங்களில், இந்திய ஆயுத படைகளுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது.

Source: ANI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்