Aran Sei

இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி – மாற்றி மாற்றி பேசும் ஒன்றிய அரசு

நாட்டில் உள்ள அனைவருக்கும்  இந்தாண்டு டிசம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் அனைவருக்கும்  தடுப்பூசி செலுத்தப்படும் என்று ஒன்றிய அமைச்சர் ஜி கிசான் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து தெரிவித்துள்ள கிசான் ரெட்டி, “இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள், நாட்டில் சிறு நகரங்களில் கூட  வாழும் கடைசி நபர்வரை தடுப்பூசி செலுத்த விரும்புகிறோம். கோவிட் தடுப்பூசியைக் கண்டுபிடித்த இரண்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது பெருமைக்குரிய விஷயம்” என்றும் கூறியுள்ளார்.

ஆனால், இதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி  நாடாளுமன்றத்தில் இதுகுறித்து  எழுப்பிய கேள்விக்கு, அவ்வாறு எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை என ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது.

கடந்த  மே 19 ஆம் தேதி, மேற்கு வங்கம் மற்றும் 8 வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள், முதன்மை செயலாளர்கள் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர்களுடன், அப்போதை சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சராக இருந்த ஹர்ஷவர்தன் கூட்டம் நடத்தினார்.

அதில், இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தமாக 215 கோடி தடுப்பூசிகள், கொள்முதல் செய்யப்படும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்கள் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் எனவும்  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில்  கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி,  இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செயல்படுத்தப்படுதுவதை ஒன்றிய அரசு முன்மொழிகிறதா. ஆம் என்றால் விவரங்கள் கொடுங்கள் என்றார். மேலும், ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரங்கள்குறித்து தெரிவிக்க வேண்டும். எனக் கோரியிருந்தார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த ஒன்றிய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணையமைச்சர் மருத்துவர் பாரதி பிரவின் பவார், “இந்த ஆண்டு முடிவுற்குள் 18 ஆண்டு நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியும் என அரசு எதிர்ப்பார்க்கிறது. ஆனால் அதற்குள் முடிக்க வேண்டும் என்ற எந்த காலக்கெடுவையும் அரசு நிர்ணயிக்கவில்லை” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மீண்டும்  ஒன்றிய அமைச்சர் முன்பு தெரிவித்த ஒன்றிய அரசின் பதிலுக்கே முரணாக தெரிவித்துள்ளார்.

source:தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

தொடர்புடைய செய்திகள்:

18 வயது நிரம்பியோருக்கு கட்டாயமாக தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு இல்லை – நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருக்கும் ஒன்றிய அரசு

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்