Aran Sei

கொரோனாவை தடுக்க ரெம்தேசிவிர் மருந்தின் தேவை அதிகரிப்பு – ஏற்றுமதியை தடை செய்த மத்திய அரசு

ரெம்தேசிவிர் மருந்திற்கான தேவை அதிகரித்துள்ளதால் நிலமை சீரடையும் வரை மருந்திற்கு ஏற்றுமதியை தடை  விதித்து மத்திய அரசுத் தடை விதித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிவருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படும் ரெம்தேசிவிர் மருந்திற்கான தேவை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் தேவை இன்னும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஜீலிட் சயின்ஸ் நிறுவனத்தின் ரெம்தேசிவிர் மருந்தை இந்தியாவில் 7நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன. இந்த நிறுவனங்கள் மாதித்திற்கு 38.80 லட்சம் மருந்துகளைத் தயாரிக்கும் திறன் வாய்ந்தவை.

சுகாதார அவசரநிலையை நோக்கி நகரும் குஜராத் – தன்னிச்சையாக வழக்கு பதிந்த உயர்நீதிமன்றம்

அதிகரித்து வரும் நோய் பரவலை கருத்தில் கொண்டு, ரெம்தேசிவிர் ஊசி மற்றும் ரெம்தேசிவிர் ஆக்டிவ் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசுத் தடை விதித்துள்ளது.

மேலும், இந்த மருந்துகள் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் நோயாளிகளுக்கும் எளிதில் கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மருந்து  எளிதில் கிடைக்கும் வகையில், உள்நாட்டில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், இருப்பு நிலவரம், விநியோகஸ்தர்கள் விவரங்கள் ஆகியவற்றை இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Source : The Hindu Tamil  

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்