Aran Sei

கொரோனா தடுப்பூசிகளின் விலையைக் குறைக்க வேண்டும் – சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை

கொரோனா தடுப்பூசிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலைகள் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தததை அடுத்து, விலைகளைக் குறைக்குமாறு சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளில் 50 விழுக்காடு வரை மாநில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்து கொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது. இவ்வாறு விற்கப்படும் தடுப்பூசிகளுக்கான விலையைத் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

மத்திய அரசின் அனுமதியை அடுத்து, கோவிட்ஷீல்ட் தடுப்பூசிக்கு விலையாக மாநில அரசுகளுக்கு ரூ. 400 எனவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 600 எனவும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிர்ணயித்தது.

தடுப்பூசிகளுக்கு கண்டுபிடிப்பு உரிமை கூடாது – 33 கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டறிக்கை

இதனைத் தொடர்ந்து கோவாக்சின் தடுப்பூசிக்கான விலையாக மாநில அரசுகளுக்கு ரூ. 600 எனவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 1,200 எனவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு நிறுவனங்களுக்கும் மத்திய அரசின் 50 விழுக்காடு தடுப்பூசிகளுக்கு 150 ரூபாய் என அறிவித்திருந்தது.

உலகிலேயே அதிக விலையில் தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் இந்தியா – முதலாளிகளின் நலன் காக்கிறதா மத்திய அரசு?

தடுப்பூசிகளுக்கு இந்த விலை உயர்வைப் பல்வேறு மாநில அரசின் முதல்வர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, மருந்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

முன்னதாக, உற்பத்தியைப் பெருக்கு ஆலையை விரிவுபடுத்த வேண்டியிருப்பாதல் இந்த விலை என சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை செயல் அதிகாரி பூனாவாலாவும், ஏற்றப்பட்டிருக்கும் விலை என்பது கண்டிபிடிப்பிற்கான அத்தியாவசியம் என பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா எல்லா ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

Source : PTI

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்