Aran Sei

கொரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்கள் – ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவு

கொரோனா இரண்டாம் அலையில் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் எந்தளவுக்கு பாதிப்படைந்துள்ளனர் என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

லாக் அப் மரணங்களில் 70 சதவீதம் விளிம்புநிலை மக்களே – மனித உரிமை அமைப்பு

மேலும், கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் விளிம்பு நிலையில் உள்ளவர்களுடைய குழந்தைகள், முதியோர்கள், அனாதைகள், ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் எந்தளவிற்கு பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறித்து ஆய்வு செய்யவேண்டுமென அந்த உத்தரவில்
உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

அதுமட்டுமல்லாது, விளிம்பு நிலையில் உள்ளவர்களில் யாருக்கெல்லாம் அரசின் உதவி தேவைப்படுகிறதோ, அவர்களுக்கெல்லாம் வழிகாட்டுதல்களை வழங்கவும் ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனாவை சமாளிக்க உடனடி நடவடிக்கை தேவை – பிரதமர் மோடிக்கு அரசியல் நடத்தை குழுவினர் கடிதம்

இந்த அறிவிப்பின் வழியாக கொரோனா இரண்டாம் அலையில் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் கண்டறிய இயலும் என்றும், உடனடியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்