Aran Sei

147 கோடியை விளம்பர நிறுவனங்களுக்கு நிலுவையில் வைத்துள்ள ஒன்றிய அரசு – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளியான உண்மை

ல்வேறு அச்சு ஊடகங்களில் ஒன்றிய அரசுஅளித்த விளம்பரத்திற்காக 147 கோடி ரூபாய்க்கு அதிகமான தொகை அளிக்க வேண்டியுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில்  தெரியவந்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்,கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து அச்சு ஊடகத்தில் கொடுக்கப்பட்ட 76,000  விளம்பரங்களுக்காக  வழங்கப்பட வேண்டிய தொகை நிலுவையில் உள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பட்டியல் சமூக மக்களுக்கு மறுக்கப்படும் வழிபாட்டு உரிமை – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

சட்டம் பயிலக்கூடிய மாணவர் அநிகேத் கௌரவ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்  தாக்கல் செய்த மனுவின் வழியாக இந்த தகவல் தெரியவந்துள்ளதாகவும்  தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று, மின்னனு ஊடகத்திற்கு செலுத்த வேண்டிய 67 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும், வெளிப்புற விளம்பரத்திற்காக ஏறத்தாழ 18 கோடி ருபாய் நிலுவையில் உள்ளதாகவும் அந்தத் தகவலின் வழியாக அறியமுடிவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆறுகள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாப்பது மாநில அரசுகளின் அடிப்படைக் கடமை – கேரள உயர்நீதிமன்றம்

கடந்த ஜூன் 21, 2021 வரை  அதிகபட்சமாக பாதுகாப்புத் துறையில் கொடுக்கப்பட்ட 12,271விளம்பரங்களுக்காக 16 கோடிக்கும்  அதிகமான  தொகை நிலுவையில் உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து நிதி அமைச்சகத்தால் கொடுக்கப்பட்ட விளம்பரத்திற்காக 13 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளதாக தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்