Aran Sei

தமிழ்நாட்டை இராணுவமயமாக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசு – உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்

மிழ்நாட்டை இராணுவமயமாக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிராக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவிலேயே இரண்டு இடங்களில் அணுவுலைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான் என்றும், உலகமே கைவிட்ட ஈனுலைகள் மூன்று கல்பாக்கத்தில் அமைக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரும் ஓ.என்.ஜி.சி நிறுவனம் – அனுமதியளிக்கக்கூடாதென தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்

மேலும், ஈனுலைகள்தான் ப்ளுட்டோனியத்தின் ஊற்று, இந்தியாவில் உள்ள கனநீர் உலைகளின் அணுக்கழிவுகள் கல்பாக்கத்தில்தான் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இரண்டாவது மறுசுழற்சி மையமும் கல்பாக்கத்தில் அமைகிறது, மறுசுழற்சி மையங்களில் அணுக்கழிவுகளில் இருந்து ப்ளுட்டோனியம் பிரித்தெடுக்கப்படுகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூடங்குளத்தில் 6 உலைகளும் அமைக்கப்படும் பட்டச்சத்தில், உலகில் ஒரே இடத்தில் 6000மெவா உற்பத்தி செய்யும் அணுவுலைகளின் பட்டியலில் இணைந்துவிடும், இங்கேயே மென்நீர் உலைகளிலிருந்து வரும் அணுக்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான ஆலைகள் அமைக்கப்படும்.இன்னும் 20-30ஆண்டுகளில் நியூட்ரினோ ஆயுதங்களை உருவாக்க பயன்படும்,  ஆய்வகம் தமிழ்நாட்டில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.

காவிரி டெல்டாவில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியை தடுத்திட வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

அதுமட்டுமின்றி, நெல்லையில் உள்ள கட்டபொம்மன் கப்பல் படைத்தளம் மூன்று மடங்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. தனுஷ்கோடி ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது. இதைப்போலவே, தஞ்சாவூரில் உள்ள விமானப்படையின் தளம் மேம்படுத்தப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு முன்னர் இராணுவ தளவாட உற்பத்தி கேந்திரம் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட போதே,  8 வழிச்சாலையும் அதானி துறைமுக விரிவாக்கமும்,  தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் இராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யவதற்கான நடவடிக்கைகள் என்று பூவுலகின் நண்பர்கள் எடுத்தது எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இந்நிலையில், இராணுவ தளவாடங்கள் உற்பத்தியை மேற்கொள்ளும் கேந்திரத்தில் எல்லாமும் உற்பத்திசெய்யப்படும். இரசாயணங்களை பயன்படுத்தி குண்டுகள் தயாரிப்பது, முதல் இராணுவ வீரர்களுக்கு சீருடை தயாரிப்பது வரை எல்லாமும்.இந்த தொழிற்சாலைகளுக்கு சுற்றச்சூழல் சட்டங்கள் உள்ளீட்ட எந்த சட்டமும் செல்லாது எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.

எனவே, இராணுவ உற்பத்தி சம்மந்தப்பட்ட எந்த விஷயமும் எதிரிகளின் முதல் இலக்கு எனபதையும் மறந்துவிட வேண்டாம் எனவும், தமிழ்நாட்டில் இராணு உற்பத்தி கேந்திரத்தை அனுமதிப்பதற்கு எதிராக,  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்