ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்றைய தினம் உள்கட்டமைப்பு துறை பொதுச்சொத்துகளை மதிப்புகளை வெளிக்கொணரும் வகையில், 6 லட்சம் கோடி மதிப்பிலான தேசிய பணமாக்கல் திட்டத்தை அறிவித்திருந்தார்.
இதுகுறித்து தெரிவித்திருந்த நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், அடுத்த நான்கு ஆண்டுகளில் சொத்துக்களை பணமாக்குவதற்கான திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் கூறியிருந்தார்.
மேலும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டின் நிதியறிக்கையையில் சொத்து பணமாக்கல் குறித்து குறிப்பிடத் தகுந்த அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், 6 லட்சம் கோடி மதிப்பிலான பொது சொத்துகளைத் தனியார்மயப்படுத்தும் தேசிய பணமாக்கல் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
அவை பின்வருமாறு:
தனியார்மயமாக்கப்படும் பொதுத்துறை சொத்துக்கள்
துறை | மதிப்பு | சொத்து |
சாலை | 1.6 லட்சம் கோடி | 27,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலை |
ரயில்வே | 1.5 லட்சம் கோடி | 400 ரயில்வே நிலைங்கள், 150 ரயில்கள், ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பகம் |
மின்பகிர்மானம் | 67,000 கோடி | 42,300 கி.மீ சுற்று தூரம் |
மின்உற்பத்தி
|
32,000 கோடி | 5000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட நீர்,காற்றாலை,சூரிய மின் உற்பத்தி சொத்துகள் |
எரிவாயுக் குழாய் | 24,500 கோடி | ஏறத்தாழ 8000 கி.மீ கெயில் குழாய் |
உற்பத்திக் குழாய் | 22,500 | 4000 கி.மீ குழாய் |
தொலைத்தொடர்புத் துறை | 39,000 | 2.86 லட்சம் கி.மீ பாரத்நெட் பைனர், பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.எஸ்.என்.எல் தொலைதொடர்புத்துறை கோபுரம் |
கிடங்கு | 29,000 | |
சுரங்கம் | 32,000 | 160 நிலக்கரி திட்டங்கள், 761 கனிமவளப் பகுதிகள் |
விமானம் | 20,782 | 25 விமான நிலையங்கள் |
துறைமுகம் | 12,800 | 9 முக்கிய துறைமுகங்களில் 31 திட்டங்கள் |
விளையாட்டு மைதானம் | 11,500 | 2 தேசிய மைதானங்கள் |
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.