Aran Sei

15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் வாகனங்களுக்கு பசுமை வரி – மத்திய அரசு அறிவிப்பு

ந்தியாவெங்கும் 15 ஆண்டுகள் பழமையான 4 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் இயக்கப்பட்டுவருவதாகவும் அவற்றுக்குப் பசுமை வரி விதிக்கப்படவுள்ளதாக மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதிகபட்சமாகக் கர்நாடக மாநிலத்தில் ஏறத்தாழ 70 லட்சம் பழமையான வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதல் – CO2 உமிழ்வுகளை குறைப்பதற்கான ஒப்பந்தத்தின் நிலை என்ன?

மேலும், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா, லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில் இயக்கப்படும் பழைய வாகனங்களின் புள்ளிவிவரம் மட்டும் குறிப்பிடப்படவில்லை.

ஏற்கனவே 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் பழமையான வாகனங்களுக்குப் பசுமை வரி விதிக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

‘அம்பானி, அதானியின் நெருக்குதலின் கீழ் பிரதமர் மோடி – விவசாய சங்கத் தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹன்

இந்த 4 கோடி வாகனங்களில் 2 கோடி வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு வருகிறது .இதில் கர்நாடக மாநிலத்தில் ஏறக்குறைய 70 லட்சம் பழைய வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்துக்கு அடுத்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலான 56.54 லட்சம் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில் 24.55 லட்சம் வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்டது.

நீர்மின் திட்டங்கள் – ஆறுகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான நீரோட்டத்தை விடுவிக்க எதிர்ப்பு

தமிழகத்தில் 15 ஆண்டுகள் மேலான 33.43 லட்சம் வாகனங்களும், கேரளாவில் 34.64 லட்சம் வாகனங்களும், பஞ்சாப்பில் 25.38 லட்சம் வாகனங்களும், மேற்கு வங்கத்தில் 22.69 லட்சம் வாகனங்களும் இயக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் ,டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக 49.93 லட்சம் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 35.11 லட்சம் வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்டது ஆகும்.

ஒரு இமாலய துயரம் கற்பிக்கும் ஆறு பாடங்கள் – ராமச்சந்திர குஹா

ஹரியாணா, ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் 12.29 லட்சம் முதல் 17.58 லட்சம் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதே போல, ஜார்கண்ட், உத்தரகாண்ட், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, அசாம், பிஹார், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரு லட்சம் முதல் 5.44 லட்சம் 15 ஆண்டுகளுக்குப் பழமையான வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும் அமெரிக்கா- சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வாழ்த்து கூறி வரவேற்ப்பு

இந்நிலையில் காற்று மாசுபாட்டினை குறைக்க 15 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கும் வாகனங்களுக்குப் பசுமை வரி விதிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அறிக்கை கூறியுள்ளது.

source; PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்