Aran Sei

தமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு தாரை வார்த்த மத்திய அரசு – தானாக முன்வந்து வழக்கு பதிந்த உயர்நீதிமன்றம்

Image Credits: The Hindu

மிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் மற்றும் ரெம்தேசிவிர் மருந்தைத் தமிழக அரசிடம் கேட்காமல் பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியது தொடர்பாக தானாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு பதிந்துள்ளது.

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உற்பத்தி செய்யப்பட்ட 45 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு வழங்கிட மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்குத் தமிழகழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ”தமிழகத்தில் தயாரிக்கப்பட்டு வரும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்புவது தொடர்பாக மத்திய அரசு எந்த ஆலோசனையும் தமிழக அரசுடன் நடத்தப்படவில்லை” என தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

’கடன் வாங்கியோ, பிச்சை எடுத்தோ, திருடியோ ஆக்சிஜனை உறுதி செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு’ – மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

மேலும், பிற மாநிலங்களுக்கு உதவி செய்ய தமிழக அரசு எப்போதும் தயாராக இருந்தாலும், தமிழகத்திலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால், ஏற்பட்டிருக்கும் ஆக்சிஜன்  தேவையைக் கருத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும்” என குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பான பத்திரிக்கையில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகளை வெளியேற சொன்ன மருத்துவமனை – வேறொரு மருத்துவமனைக்கு இடம்பெயர உத்தரவு

இந்த வழக்கின் விசாரணை இன்று (ஏப்ரல் 22) மதியம் 2.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

ஆக்சிஜன் மருத்து உள்ளிட்டவற்றை பிற மாநிலங்களுக்கு அனுப்பியது தொடர்பாக தமிழக அரசின் விளக்கத்தைக் கேட்க தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்குத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. பிற மாநிலங்களுக்கு ஏற்பட்ட நிலைமை தமிழகத்திற்கு வந்துவிடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source : The Hindu Tamil

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்