Aran Sei

தடுப்பூசிகளை ஏழைகள் பெற முடியுமா?; விலையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றம்

credits : the indian express

கொரோனா நோய்த்தொற்றுப் பரவலை ஒரே மாதிரியாக எதிர்கொண்டிருக்கும் குடிமக்களிடையே வர்க்க ரீதியான வேறுபாட்டைக் காட்ட முடியாது என்றும் கொரோனா விலைபட்டியலை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்றைய தினம், 3,68,147 பேர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,99,25,604  ஆக  உயர்ந்துள்ளது. இதுவரை, கொரோனா நோய்த்தொற்றால் 2,18,959 பேர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 3,417  பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசிகள், கொரோனா பெருந்தொற்று சமயத்தில் மக்களை அடிப்படை மற்றும் அத்தியவாசிய தேவைகளை வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து பல்வேறு கேள்விகளை மத்திய அரசிட முன்வைத்துள்ளது.

கொரோனா அதிகம் பரவுவதால் பெருமளவில் மக்கள் கூடுவதற்கு தடைவிதிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம்

உச்ச நீதிமன்ற நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “இன்றைய தேதிவரை, தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தடுப்பூசிக்கு இரண்டு விலையை நிர்ணயம் செய்துள்ளனர், மத்திய அரசுக்குக் குறைந்த விலையும், மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் அளவிற்கு அதிக விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகளைத் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களோடு (விலை நிர்ணயம் செய்ய) பேரம் பேச வைத்துக் கொண்டிருப்பது, பிற நிறுவனங்களிடையே போட்டியை உருவாக்குதிலும், புதிதாக தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களைக் கவரவே உதவும். இது மாநில அரசால் தடுப்பூசி பெற்றுக் கொள்ளக்கூடிய 18 முதல் 44 வயதினருக்கும் இழைக்கப்படும் தீங்கு” என்று  நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

‘இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ வேண்டும்’ – திமுக கூட்டணிக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

”இந்தச் சமூக அடுக்கில் (18-44) இடம் பெற்றுள்ள பலர் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்களாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களால் தடுப்பூசியை வாங்கி செலுத்த வாய்ப்பிருக்காது” என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

‘மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் முழக்கமும், பிரிவினைவாத அரசியலும் தோல்வியடைந்துள்ளது’ – கபில் சிபல்

மேலும், “ஒரு மாநிலம் அதனுடைய நிதிக்கு ஏற்ப தேவையான தடுப்பூசிகளைப் பெறுவது, அதை அம்மாநில மக்களுக்கு இலவசாமகவோ அல்லது மானிய விலைக்கு வழங்குவது என்பதை மாநில அரசுகளே தீர்மானம் செய்து கொள்ளட்டும் என்பது எந்த எல்லைவரை ? இது தேசம் முழுவதும் ஒரு ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திவிடும். குடிமக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் ஒரு மதிப்புமிக்க பொது நன்மை. மத்திய அரசே தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடமிருந்து பேரம் பேசி தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து வழங்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தி இந்துவின் செய்தி கூறுகிறது.

கொரோனா இரண்டாவது அலை – ‘அதிகாரபூர்வ இறப்பு 109; உண்மையான இறப்பு 2500-ஐ தாண்டுகிறது’ – போபால் சுடுகாடுகளில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஆய்வு

”இதே கொள்கையில் தடுப்பூசி வழங்கப்பட்டால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-க்கு பாதிப்பு ஏற்பட்டு, பொது சுகாதாரத்துக்கு ஆபத்தாகி விடும். எனவே, தற்போதுள்ள தடுப்பூசி கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14 மற்றும் 21-ஐ பாதுகாக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்