Aran Sei

மத்திய அரசு நாடாளுமன்றம் கட்டுவதை கைவிட்டு தடுப்பூசி கொள்முதல் செய்ய வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி

கொரோனா இரண்டாம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்திருக்கும் சூழலில் அனைவருக்கும் இலவசமாக உடனடியாக பெருமளவில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

கொரோனாவால் சீத்தாராம் யெச்சூரியின் மகன் மரணம் : ஸ்டாலின் இரங்கல்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில்,”அனைவருக்கும் இலவசமாக உடனடியாக பெருமளவில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்; 1.அதற்கான நிதியாக 35,000 கோடி ஒதுக்கப்பட வேண்டும். 2. 20,000 கோடியில் கட்டப்படும் நாடாளுமன்ற திட்டத்தைக் கைவிட்டு விட்டு தடுப்பூசி கொள்முதல் செய்யபட வேண்டும். 3. பிரதமர் நல(PMCares) நிதியில் தடுப்பூசி வாங்கிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதே போன்று, கடந்த ஏப்ரல் 29 அன்று வெளியிட்டிருந்த பதிவில், கொரோனாவை கட்டுப்படுத்த எதாவது செய்யுங்கள் இல்லையென்றால் பதவி விலகுங்கள் என்றும் மத்திய அரசுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்திருந்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்