Aran Sei

’ஆர்எஸ்எஸ்காரர்களை போராட்டத்திற்குள் அனுப்பி, மத்திய அரசு வன்முறையை தூண்டுகிறது’ – விவசாயிகள் குற்றச்சாட்டு

த்திய அரசு தங்களுடைய ஆட்களைச் செங்கோட்டைக்கு அனுப்பிவைத்து, வன்முறையில் ஈடுபட வைத்து வழக்குகளை மட்டும் எங்கள்மீது பதிவு செய்துள்ளது என்று விவசாயிகள் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஜனவரி 26 ஆம் தேதி நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. இதுதொடர்பாக, விவசாயிகள் சங்க தலைவர்கள் உட்பட பலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

‘வன்முறையைத் தூண்டிய பாஜக; டெல்லியில் ரத்தம் சிந்திய விவசாயிகள், காவலர்கள்’ – சிவசேனா குற்றச்சாட்டு

இந்நிலையில், இன்று (ஜனவரி 29) கிசான் மஸ்தூர் சங்கார்ஷ் கமிட்டியின் தலைவர் சத்னம் சிங் பன்னு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார். அப்போது, “எங்கள் போராட்டத்தைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே பல்வேறு மோசமான தந்திரங்களை மோடி அரசு செய்து வருகிறது. ஆர்எஸ்எஸ் சார்பு நபர்களைப் போராட்டத்துக்குள் அனுப்பி, எங்களுக்குள் கலகத்தை விளைவிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று (ஜனவரி 28) இருமுறை இதுபோல் நடந்தது என்று குறிப்பிட்ட சத்னம் சிங் பன்னு,“நாங்கள் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் திரும்பிச் செல்லமாட்டோம். இன்று (ஜனவரி 29) மாலை இன்னும் அதிகமான விவசாயிகள் போராட்டத்தில் இணைய உள்ளார்கள்.” என்றும் கூறியுள்ளார்.

டெல்லி வன்முறைகள்: உளவுத்துறையின் தோல்விக்கு அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

போராடும் விவசாயிகள் யாரும் செங்கோட்டைக்குச் செல்லவில்லை என்றும் நாங்கள் திட்டமிட்டபடி டெல்லி காவல்துறையினர் கூறிய சாலையில்தான் சென்றோம் என்றும் சத்னம் சிங் கூறியுள்ளதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

மேலும், “மத்திய அரசு தங்களுடைய ஆட்களைச் டெல்லி செங்கோட்டைக்கு அனுப்பிவைத்து வன்முறையில் ஈடுபட வைத்து வழக்குகளை மட்டும் எங்களுக்கு எதிராகப் பதிவு செய்துள்ளது. அந்த வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகள் யாரும் வன்முறையில், அராஜகத்தில் ஈடுபடவில்லை. எங்களுக்கு எதிராக ஏதோ சதி நடந்திருக்கிறது.” என்று கிசான் மஸ்தூர் சங்கார்ஷ் கமிட்டியின் தலைவர் சத்னம் சிங் பன்னு கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்