Aran Sei

‘தமிழக அரசின் அனுமதியின்றி ஆக்ஸிஜனை பிற மாநிலத்திற்கு வழங்கிய மத்திய அரசு’ – எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் 45 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை ஆந்திராவுக்கு அனுப்பிய மத்திய அரசுக்கு  எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. பரவலை தடுக்க இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. எனினும் நாள்தோறும் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளும், மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மருத்துவமனை சிகிச்சைகளில் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்களே இப்போது அதிகரித்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

பத்திரிகை சுதந்திரத்திற்கான தரவரிசையில் இந்தியா 142 வது இடம் – இந்துத்துவவாதிகளால் கேள்விக்குறியாகும் கருத்துரிமை என ஆய்வில் தகவல்

டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவித்த அவர்,  ஏற்கனவே கடந்த ஓராண்டாக கொரோனாவால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டும், அந்தப் பாதிப்புகளிலிருந்து கிடைத்த பாடங்கள் மூலம் போதிய முன்னேற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளாததன் விளைவே தற்போதைய ஆக்ஸிஜன் பற்றாக்குறை, ரெம்டெசிவர் மருந்து, தடுப்பூசி பற்றாக்குறை போன்றவை என்று தெரிவித்துள்ளார்.

பற்றாக்குறை காரணமாக வட மாநிலங்களில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தமிழகத்திலும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக சில நாட்களுக்கு முன்பு நான்கு உயிர்கள் பலியான செய்திகள் வெளியானதையும் அறிக்கையில் நெல்லை முபாரக்  சுட்டிக்காட்டியுள்ளார்.

 மகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் டாங்கரில் இருந்து வாயுக்கசிவு – 22 பேர் உயிரிழப்பு

”தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசை கேட்காமலேயே தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. தேவைக்கு அதிகமாக இருக்கும் போது பிற மாநிலங்களுக்கு உதவுவது தான் சிறந்த மனிதாபிமான நடவடிக்கையாகும். அதேவேளையில், தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசிடம் அனுமதி கோராமல் பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களுக்கு அனுப்பிவைப்பது என்பது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.

‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லமறுத்த இந்து சிறுவன் – தாக்கிய பாஜக தொண்டர்

கொரோனா பரவல் துவங்கியது முதல் அனைத்து உயிர்காக்கும் மருந்துகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த மத்திய அரசு, மாநிலங்களுக்குப் போதிய உயிர்காக்கும் மருந்துகளை வழங்காமல் பாதிப்பிலும் அரசியல் செய்து வருவதாகவும், மாநில அரசுகளின் கைகளைக் கட்டிவிட்டு, தொற்றுப் பரவலை மாநில அரசுகள் தான் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கூறிவருவதையும் அறிக்கையில் நினைவூட்டியுள்ளார்.

”மக்களின் உயிர்களை பற்றி கவலைகொள்ளாமல், இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கைகள் மூலம் பாஜக அரசு நாட்டை ஆள்வதற்கான அனைத்து தார்மீக பொறுப்புகளையும் இழந்துவிட்டது” என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்