Aran Sei

ஒன்றிய அரசின் அச்சுறுத்தலில் இருந்து, கட்சியின் உறுப்பினர்களை பாதுகாக்க பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் – சிவசேனா எம்.எல்.ஏ உத்தவ் தாக்ரேவிற்கு கடிதம்

ன்றிய அரசின் நிறுவனங்களின் அச்சுறுத்தலில் இருந்து, கட்சியின் தலைவர்களைப் பாதுகாக்க கட்சி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென சிவ சேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பிரதாப் சர்நாயக் அக்கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சருமான உத்தவ் தாக்ரேவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக என்.டி .டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

மருத்துவர்கள் அச்சுறுத்தலின்றி பணிபுரிய பிரதமர் தலையிட்டு உரிய  நடவடிக்கை எடுக்கவேண்டும் – இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்

மேலும், முன்பு போல பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும், தற்போது மிகுந்த காலதாமதம் ஆகியுள்ளதாகவும், குறிப்பாக மும்பை மற்றும் தானே பகுதிகளுக்கான மாநகராட்சி தேர்தல்கள் வரவிருப்பதாகவும் பிரதாப் சர்நாயக் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 10 அன்று, உத்தவ் தாக்கரேவிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் , ஒன்றிய அரசின் எண்ணற்ற  அமைப்புகள் என்னை தொடர்ந்து வருகின்றன, ஏற்கனவே கட்சியின் தலைவர்களான அணில் பராப், ரவீந்திர வைகர் அவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டுள்ளதாகவும் என்.டி.டி.வி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பாலஸ்தீனர்களை அச்சுறுத்தும் யூத பயங்கரவாதிகள் – கிராமங்களை விட்டு வெளியேற்றும் கொடுமை

அதுமட்டுமின்றி, பிரதமர் நரேந்திரமோடியுடன் கைகோர்த்துக் கொள்வதால் கட்சியின் தலைவர்களை காப்பாற்ற முடியுமென தான் கருத்துவதாகவும் அந்த கடிதத்தில் பிரதாப் சர்நாயக் கூறியள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நிதிமோசடி தொடர்பாக பிரதாப் சர்நாயக் மற்றும் அவரது மகன் விஹாங் சர்நாயக் ஆகியோருக்கு சொந்தமான எண்ணற்ற இடங்களில் அமலாக்கத் துறை ஈடுபட்டிருந்தாகவும் என்.டி .டி.வி செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தீ விபத்தில் உயிரிழந்த கொரோனா நோயாளிகள் – அச்சுறுத்தும் கொரோனா மருத்துவமனை தீ விபத்து

இந்த கடிதம் குறித்து தெரிவித்துள்ள அம்மாநில பாஜகவின் முக்கியத் தலைவர் கிரிட் சோமையா, சட்டமன்ற உறுப்பினர் பிரதாப் சர்நாயக்கின் இந்த பரிந்துரை கைது செய்யப்படுவோமோ என்கிற அவரது பயத்தைக் காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்